- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு தாயாக நடிப்பது இவரா... ஏற்கனவே இவங்க அந்த படத்தில் தளபதிக்கு...

என்னது… ஜனநாயகன் படத்தில் விஜய்க்கு தாயாக நடிப்பது இவரா… ஏற்கனவே இவங்க அந்த படத்தில் தளபதிக்கு அக்காவாக நடித்திருந்தார்களே…

- Advertisement -

நடிகர் விஜய் தற்போது தனது அரசியல் கட்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் கட்சியை ஆரம்பித்தார். தமிழக வெற்றி கழகம் என இதற்கு பெயர் வைக்கப்பட்டது. அப்போது, தான் திரைத்துறையை விட்டுவிட்டு, தீவிர அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்தார். அதற்கு ஏற்றார் போலவே தனது காய்களை அவர் நகர்த்தி வருகிறார்.

அண்மையில் கோவையில் மிகப்பெரிய பூத் கமிட்டி மாநாட்டை விஜய் நடத்தியிருந்தார். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமல்லாமல் விஜயை பார்க்க மக்கள் சாலை எங்கும் கூடினர். தொடர்ந்து ரோடு ஷோவும் தளபதி நடத்தினார். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இப்படி அரசியலில் மிக முக்கிய பிரபலமாக வர ஆரம்பித்து விட்டார் விஜய்.

- Advertisement -

இப்படியான சூழலில் ஒட்டுமொத்த தமிழகமும் அவரது கடைசி திரைப்படம் மீதான பார்வையை திருப்பி உள்ளது. அஜித் குமாரை வைத்து தொடர்ந்து மூன்று திரைப்படங்களை இயக்கிய ஹெச் வினோத், இந்த முறை விஜயுடன் கைகோர்த்து இருக்கிறார். தளபதியின் கடைசி திரைப்படத்தை அவர் இயக்குவதால் வினோத்திற்கு மிக முக்கியமான பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறவேண்டும்.

இதற்கு ஜனநாயகன் என தலைப்பு வைத்திருக்கிறார்கள். பூஜா ஹெக்டே, மமீதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கங்குவா படத்தில் வில்லனாக வந்த பாபி தியோல், இதிலும் வில்லனாகவே வருகிறார். பிரகாஷ் ராஜ், நரேன், கௌதம் மேனன் உள்ளிட்டோரும் இடம் பெற்றிருக்கிறார்கள். இதன் பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில் உள்ள பையனூரிலேயே நடைபெற்றது.

- Advertisement -

தற்போது விஜய் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருவதால் வெளிநாடுகளிலும் வெளியிடங்களிலும் இந்த திரைப்படத்தின் சூட்டிங் நடத்த முடியாது என்பதால், பையனூரை தேர்வு செய்தார்கள். இதன் இறுதி கட்ட சூட்டிங் கொடைக்கானலில் நடைபெற்றது. இதற்காக டை அடித்துக் கொண்டு மிக இளமையான தோற்றத்தில் விஜய் காட்சியளித்தார்.

இந்த நிலையில் படத்தில் விஜயின் தாயாக ரேவதி நடித்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அவருக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கனவே விஜயின் அக்காவாக தமிழன் திரைப்படத்தில் ரேவதி நடித்திருந்தார். இப்படியான சூழலில்தான் அவர் மீண்டும் விஜயுடன் நடிக்க கைகோர்த்து இருப்பதாக பலரும் சொல்லி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்