கடந்த வாரம் 5ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி துவங்கியது. இந்த முறை சினிமா நடிகர் நடிகைகள் யாரும் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்துக்கொள்ளவில்லை. பெரும்பாலும் யூடியூப் இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். 10 ஆண்கள் 9 பெண்கள் ஒரு திருநங்கை என மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் விளையாட வந்துள்ளனர்.
வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கம்ருதீன் சபரி இயக்குனர் பிரவீன் காந்தி விக்கல் விக்ரம் பிரவீன் ராஜ் கலையரசன் எஃப்ஜே கானா வினோத் துஷோர் என 10 ஆண்கள் கனி சுபி பார்வதி வியானா நந்தினி கெமி அரோகரா ஆதிரை ரம்யா ஜோ என 9 பெண்கள் திருநங்கை அப்சரா என சீசன் 9ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வருகின்றனர்.
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போட்டியாளர்கள் அவர்கள் வெளியேற்ற விரும்பும் 2 போட்டியாளர்களை தேர்வு செய்து நாமினேட் செய்ய வாய்ப்பு தரப்படும். அவர்கள் நேரடியாக நாமினேஷனில் லிஸ்ட்டில் வந்துவிடுவர். அவ்வாறு நாமினேட் ஆகும் போட்டியாளர்களில் யாரை எலிமினேட் செய்ய வேண்டும் என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். அவர்கள் ஆன்லைன் மூலம் வாக்களித்து எந்த போட்டியாளரை காப்பாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள்.
மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் குறைவான ஓட்டுகளை பெறும் போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவது வழக்கம். பிக்பாஸ் சீசன் 9ல் முதல் வாரம் நடந்த நாமினேஷன் லிஸ்ட்டில் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஆதிரை வியானா பிரவீன்ராஜ் அப்சரா கலையரசன் பிரவீன் காந்தி ஆகியோர் தேர்வாகினர்.
இதில் வாட்டர்மெலன் திவாகர்தான் எலிமினேட் ஆவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் மக்கள் மத்தியில் அவருக்கு அனுதாப அலை வீசுகிறது. அதனால் திவாகருக்கு மக்கள் வாக்குகளை அள்ளித் தருவதால் இந்த வாரம் அதிக ஓட்டுகளை பெற்று முதல் இடத்தில் திவாகர் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக அதிக வாக்குகளை போட்டியாளர்கள் ஆதிரை மற்றும் வியானா பெற்றுள்ளனர்.அடுத்ததாக நாமினேஷன் லிஸ்ட்டில் உள்ள பிரவீன்ராஜ் மற்றும் அப்சரா ஆகியோருக்கும் இதுவரை கணிசமான ஓட்டுகள் கிடைத்துள்ளன.
அதனால் டேஞ்சர் ஜோனில் இருப்பது கலையரசன் மற்றும் இயக்குனர் பிரவீன் காந்தி தான். அவர்கள் இருவரில் பிரவீன் காந்திக்கு தான் மிகவும் குறைந்த வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அதனால் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக வெளியேறும் போட்டியாளர் பிரவீன் காந்தியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





