- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தை மட்டும் 120 முறை பார்த்தேன், அதன்பிறகு வந்த இந்த படத்தை 70...

அந்த படத்தை மட்டும் 120 முறை பார்த்தேன், அதன்பிறகு வந்த இந்த படத்தை 70 முறை பார்த்தேன் – இப்படி கேப்டன் விஜயகாந்த் சொன்னது அவர் நடித்த படங்களா?

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். நீண்ட ஆண்டுகளாக அவர் பலவிதமான உடல் நலக்கோளாறுகள் பாதிக்கப்பட்ட நிலையில், உடல் நலம் மோசமடைந்து காலமானார். அவரது மறைவு தமிழக மக்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.

கேப்டன் விஜயகாந்த் 180க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மற்ற நடிகர்களின் படங்களையும் அவர் விரும்பி பார்க்கக் கூடியவர். ஒருமுறை அவரது மனைவி பிரேமலதா கூறுகையில், இரவு நேரங்களில் நீண்ட நேரம் அவர் ஆங்கில படங்களை பார்ப்பார். அருகில் இருக்கும் என்னிடம் படத்தில் அதுகுறித்து தமிழ் அர்த்தம் கேட்டுக்கொண்டே இருப்பார் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சின்ன வயதில் இருந்தே சினிமா பார்க்கும் ஆர்வம் விஜயகாந்துக்கு மிக மிக அதிகம். அதனால் மதுரையில் உள்ள சினிமா தியேட்டர்களுக்கு அங்குள்ள நண்பர்களுடன் செல்வது அவரது அன்றாட வழக்கம். வாரத்தில் ஒரு நாள், இரண்டு நாள் அல்ல. புதிய படம் எப்போது வந்தாலும் பார்க்க போய்விடுவார். ஒரு படம் பிடித்து விட்டால் அதையே சலிக்காமல் திரும்ப திரும்ப பார்க்கும் குணம் கொண்டவர் கேப்டன்.

பல ஆண்டுகளுக்கு விஜயகாந்த் அளித்த நேர்காணல் ஒன்றில் தனது சினிமா ஆர்வம் குறித்த பல விஷயங்களை வெளிப்படையாக பகிர்ந்து இருக்கிறார். அப்போது அவர் கூறியதாவது, எங்களுக்கு சொந்தமான ரைஸ் மில் இருந்தது. ரைஸ் மில்லுக்கு பக்கத்தில் சினிமா தியேட்டர்களும் இருந்தன. அடிக்கடி படம் பார்க்க செல்வேன்.

- Advertisement -

நான் என் வாழ்க்கையில் அதிகமுறை பார்த்த படம் என்றால், அது எங்கள் வீட்டு பிள்ளைதான். 120 முறைக்கு மேல் அந்த படத்தை பார்த்திருக்கிறேன். அந்த படத்தில் வரும் சண்டைக்காட்சிகள் மிகவும் பிடிக்கும். ஏனென்றால் எம்ஜிஆரை எனக்கு சின்ன வயதில் இருந்தே ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன், மகாதேவி, அரசிளங்குமரி போன்ற படங்களை போல, அடுத்துவந்த அவர் படங்களில் சண்டைகாட்சிகள் இல்லையே என வருத்தப்பட்டேன். அப்போது வந்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன். அந்த படத்தை 70 முறை பார்த்தேன். என்னை எம்ஜிஆரின் ரசிகன் என்று சொல்வதை விட வெறியன் என்றே சொல்லலாம் என்று கூறியிருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

- Advertisement -

சற்று முன்