- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடாமுயற்சி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட தயாரான படக்குழு - போடு வெடிய, அன்னிக்கு தான்...

விடாமுயற்சி பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட தயாரான படக்குழு – போடு வெடிய, அன்னிக்கு தான் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரப் போகுதா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த துணிவு படத்துக்கு பிறகு, விடாமுயற்சி படம் வெளியாக இருக்கிறது. துணிவு படம் ரிலீஸானது, கடந்த 2023 பொங்கலுக்குதான். ஓராண்டுக்கு மேலாகியும் அஜீத் படம் எதுவுமே வராத நிலையில், அவரது ரசிகர்கள் பலத்த ஏமாற்றத்தில் இருந்தனர்.

இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியதாக கூறப்படும் நிலையில், படம் குறித்த அப்டேட்டுகளாக தொடர்ந்து ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் இதுவரை படக்குழு மற்றும் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து, குறிப்பிடத்தகுந்த அப்டேட் எதுவுமே செய்யப்படவில்லை.

- Advertisement -

துணிவு, படம் வெளியான போதுதான் விஜய் நடித்த வாரிசு படமும் வெளியானது. அதற்கு பின், கடந்த அக்டோபர் 19ல், அவர் நடித்த லியோ படம் ரிலீஸ் ஆனது. இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கிய நிலையில், சில மாதங்களில் அந்த படமும் வெளியாக உள்ளது.

அதற்கு முன்னதா, மே 1ம் தேதி, அஜீத்குமார் பிறந்த நாளன்று விடாமுயற்சி படம் ரிலீசாக வேண்டும் என்று அஜீத் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். படக்குழுவும் அதன்படிதான் திட்டமிட்டு வருகிறது. ஏனெனின் அடுத்த மாதம் மார்ச்சில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புது படத்தில் அஜீத் நடிக்க உள்ளார்.

- Advertisement -

அஜீத்குமார் நடிப்பில் திரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என பலரும் ஆவலாக கேட்டுக்கொண்டிருந்த நிலையில், அதுபற்றிய முக்கிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 14ம் தேதி, அதாவது காதலர் தினத்தன்று வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. காதலர் தினம் ஒரு மகிழ்ச்சியான நாள். அந்த நாளில் அஜீத்குமார், தனது ரசிகர்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக, அந்த நாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு தயாராகி வருகிறது. இது அஜீத் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்