சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது வேட்டையன் படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இந்த படத்தை இயக்குநர் தசெ ஞானவேல் இயக்கி வருகிறார். இதில் பகத் பாசில் ரஜினிக்கு மகனாக நடித்திருக்கிறார்.
வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்துவிடும் ரஜினிகாந்த் அடுத்து, ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினி 171 படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் அல்லது நெல்சன் இயக்கத்தில் நெல்சன் 2 படத்தில் நடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்த 3 படங்களிலும் ரஜினிகாந்த் நடிப்பதில் மிக உறுதியாக இருக்கிறார். இதற்கிடையே வரும் பிப்ரவரி 9ம் தேதி ரஜினிகாந்த், அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் படம் வெளியாகிறது. இந்த படத்திலும் ரஜினி செம மாஸ் காட்டி நடித்து அசத்தியிருக்கிறார். படம் முழுக்க 45 நிமிடங்கள் ரஜினி வருவதால் இது ரஜினி படம் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.
ரஜினியை பொருத்தவரை எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கிறார். சுறுசுறுப்பாக காணப்படுகிறார். இதற்கும் அவரது வயது 73 என்ற நிலையில் இப்படி அவர் காணப்படுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் வேட்டையன் படம் கெட்டப்பில் பார்த்தால் 40 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில் மிக இளமையாக காட்சியளிக்கிறார்.
இதற்கும் ரஜினிக்கு மதுப்பழக்கம் உள்ளது. அதிகளவில் சிகரட் பிடிப்பவர். ஆன்மிக நாட்டம் உள்ள அளவுக்கு, அவரிடம் போதைப்பழக்கமும் சிறுவயதில் இருந்தே அதிகமாக இருந்து வந்துள்ளது. அதே போல் அசைவ வகைகளையும் விரும்பி சாப்பிடுபவர். இப்படியிருந்தும் அவரால் எப்படி சுறுசுறுப்பாக அவர் இயங்க காரணம், அவர் எப்போதுமே ‘வெள்ளை’யை தவிர்த்து விடுவதுதான்.
குறிப்பாக வெள்ளை நிறத்தில் உள்ள உணவு பொருட்களை தவிர்த்து விடுவதுதான். இதை ரஜினிகாந்த் தனது 40 வயதில் இருந்தே பின்பற்றி வருகிறார். வெள்ளை நிறத்தில் அரிசி சார்ந்த உணவு பொருட்கள், அரிசி சாதம், இட்லி, தோசை, பால், தயிர், மோர் போன்றவை, அதே போல் மைதா மாவு, அஸ்கா சர்க்கரை, வெள்ளை நிற மாத்திரைகள் என இந்த 5 விஷயங்களை தவிர்ப்பதுதான் இவரது சுறுசுறுப்புக்கு மிக முக்கிய காரணம் என்பதை அவரே ஒரு பொதுநிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





