- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியுடன் நான் நடித்த அந்த அனுபவம் - ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய...

ரஜினியுடன் நான் நடித்த அந்த அனுபவம் – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன? ஓபனாக பேசிய பேராசிரியர் சாலமன் பாப்பையா!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் சிவாஜி. கடந்த 2007ம் ஆண்டில் வெளியான இந்த படத்தை ஏவிஎம் புரடக்சன்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரித்திருந்தது. இந்த படத்தில் ரஜினியுடன் ஸ்ரேயா விவேக் மணிவண்ணன் வடிவுக்கரசி சுமன் போஸ் வெங்கட் எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

சிவாஜி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக ரஜினி இதில் மிக அட்டகாசமாக நடித்திருந்தார். 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இலவச மருத்துவம் மற்றும் கல்வி நிறுவனங்கள் துவங்கும் ரஜினியின் திட்டத்தை வில்லன் நடிகர் சுமன் தவிடுபொடியாக்கி விடுவார். கடைசியில் ரஜினியை தெருவோர கடையில் சாப்பிடும் அளவுக்கு சாதாரணமான மனிதராக்கி விடுவார். பிறகு ரஜினி அதிரடி காட்டி பெரிய கோடீஸ்வரனாக மாறுவார்.

- Advertisement -

ரஜினி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சிவாஜி படத்தில் பட்டிமன்றம் ராஜா பேராசிரியர் சாலமன் பாப்பையா போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். ரஜினி மணிவண்ணன் விவேக் குடும்பத்துடன் ஸ்ரேயாவை பெண் பார்க்க வரும்போது ஸ்ரேயாவின் அப்பா பட்டிமன்ற ராஜா அவர்களை விரட்டி விடுவார்.

அப்போது அருகில் உள்ள சாலமன் பாப்பையா வீட்டுக்கு சென்று ரஜினி குடும்பத்தினர் தீபாவளியை கொண்டாடுவார்கள். வாங்க பழகலாம் என்று அவர்களை சாலமன் பாப்பையா அழைப்பது அப்போது பெரிய அளவில் டிரண்டிங் ஆனது. சில காட்சிகளில் வந்தாலும் சாலமன் பாப்பையா நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

- Advertisement -

அந்த காலகட்டத்தில் சிவாஜி படத்தின் வெள்ளி விழா நடந்தது. அன்றைய முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் பேராசிரியர் சாலமன் பாப்பையா பேசியதாவது, இந்த படத்தில் நான் நடித்தது இருக்கிறதே அதில் நான் கற்றுக்கொண்டது நான் நடித்தது அல்ல. ஒண்ணு நமக்கு தெரியாத விஷயம் அது.

ஆனால் அதை விட ரஜினிகாந்த் பக்கத்தில் இருந்து அவருடைய எளிமை அவருடைய அடக்கம் அவருடைய அன்பு அவர் காட்டுகிற பரிவு அவருக்கு வருகிற உணவுகளை எல்லாம் நமக்கு வழங்கி விட்டு ம் ம் சாப்பிடுங்க என்று அவர் சொல்கிற முறை அதை எல்லாம் பார்க்கிற பொழுது நான் அந்த படத்தில் நடித்ததை விட அவரை பார்த்து படித்தது தான் மிகப்பெரிது. அவரை நான் படித்துக் கொண்டேன். அதில் நான் கற்றுக்கொண்டது மிகப்பெரிது என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்