தமிழக முதல்வர் விஜய் ஆட்சி 100 நாட்களை கடந்த நிலையில் தமிழக மக்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். திமுக அதிமுகவுக்கு மாற்றாக ஆட்சியில் நல்ல மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. குறிப்பாக தேர்தல் வாக்குறுதிகளை எல்லாம் பொய் வாக்குறுதிகளாக தவெக மாற்றி வருகிறது.
உதாரணமாக ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசம் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பெண்கள் இலவச பஸ் பயணம் விவசாயிகள் கடன் முழுமையாக ரத்து போன்றவற்றில் நிபந்தனைகளை கொண்டு வந்து தவெக அரசு ஏமாற்றிவிட்டது. அத்துடன் மகளிர் உரிமத் தொகை ரூ. 2500 என அறிவித்த விஜய், அதுபற்றி இதுவரை எதுவுமே பேசவில்லை.
பொய்யான வாக்குறுதிகளை தந்து மக்களை ஏமாற்றுவதில் திமுக அதிமுகவை விட தவெக முந்திவிட்டது, மோசடி செய்துவிட்டது என்று மக்கள் வசைபாட துவங்கி விட்டனர். அதே நேரத்தில் திமுகவை மட்டுமே இன்னும் பேசி வரும் முதல்வர் விஜய், பாஜக குறித்து எந்த விமர்சனமும் செய்யாதது ஏன் என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.
திமுக அரசை பாயாசம் என்றும் பாஜக அரசை பாசிசம் என்றும் பேசிய விஜய் இப்போது சென்னைக்கு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த விதமும் அவருக்கு ஸ்பெஷலாக ஒரு பேக் தந்தது குறித்தும் விமர்சித்து வருகின்றனர். திமுக பாஜக மறைமுக கூட்டணி என்று அன்று பேசிய விஜய், இன்று தவெக பாஜக தான் ரகசிய கூட்டணி என்பதை உறுதிப்படுத்தி விட்டார் என்றும் பேசத் துவங்கி விட்டனர்.
இந்நிலையில் தவெக ஆட்சி குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, சட்டசபையில் என்ன கேள்வி கேட்டாலும் 3 அமைச்சர்கள் மட்டுமே எழுந்து பதில் சொல்கின்றனர். மற்ற அமைச்சர்களுக்கு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை. மேலும் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லாமல் வேறு ஏதோ பதில் சொல்கிறார்கள்.
நான் விலைவாசி உயர்வு குறித்து பேசினால் அதற்கு சம்பந்தமே இல்லாத ஒரு விளக்கத்தை அமைச்சர் சொல்கிறார். ஜனநாயகன் படத்தை பற்றி அப்படி இப்படி என்று ரீல் ஓட்டினார்கள். ஆனால் அந்த படம் ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. ஆனால் தவெக ஆட்சியை எப்படியோ ரீல் ஓட்டி 100 நாட்களுக்கு மேல் ஓட்டி விட்டார்கள் என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார்.





