- Advertisement -
Homeபொழுதுபோக்குமலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர் - மோனிகா பாடல் நடனக் காட்சியில் அசத்திபுட்டீங்களே...

மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் டான்ஸ் மாஸ்டர் – மோனிகா பாடல் நடனக் காட்சியில் அசத்திபுட்டீங்களே ப்ரோ…

- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த நடன இயக்குனராக ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றவர் சாண்டி மாஸ்டர். ரஜினி கமல் விஜய் என முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்களில் கோடியோகிராபராக பணி செய்து பிஸியான நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். சில ஆண்டுகளுக்கு முன் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சாண்டி மாஸ்டர் ஒரு போட்டியாளராக பங்கேற்று ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

நடனத்தில் மட்டுமின்றி நடிப்பிலும் ஆற்றல் மிக்கவராக சாண்டி இருப்பதால் அவரை லியோ படத்தில் சில காட்சிகளில் வரும் கொடூரமான வில்லன் கேரக்டரில் லோகேஷ் கனகராஜ் நடிக்க வைத்திருந்தார். லியோ படத்தில் சில காட்சிகளில் வந்தாலும் வில்லனாக சாண்டி மாஸ்டர் நடிப்பு மிரட்டலாக இருந்தது.

- Advertisement -

தொடர்ந்து ஹாட்ஸ்பாட் நிறம் மாறும் உலகில் உள்ளிட்ட தமிழ் படங்களில் சாண்டி மாஸ்டர் நடித்துள்ளார். இதுதவிர தற்போது மலையாள படங்களிலும் சாண்டி நடித்து வருகிறார். அந்த வகையில் திலீப் நடிப்பில் உருவாகி வரும் பா பா பா மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் கதையின் நாயகியாக நடித்துள்ள லோகா சாப்டர் 1 சந்திரா ஆகிய படங்களில் சாண்டி நடித்துள்ளார்.

இந்நிலையில் லோகா சாப்டர் 1 சந்திரா படம் வருகிற 28ம் தேதி வியாழக்கிழமை ரிலீஸ் ஆக உள்ளது. சூப்பர் உமன் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கல்யாணி சூப்பர் உமனாக நடிக்கிறார். பிரேமலு படத்தின் நாயகன் நஸ்லேன், இந்த படத்தில் கதாநாயகராக நடித்திருக்கிறார். இந்த படத்தில் வில்லத்தனம் கலந்த போலீஸ் அதிகாரி கேரக்டரில் சாண்டி நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள், படத்தில் சாண்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். மலையாளத்தில் இது சாண்டிக்கு முதல் படம் என்பதால் மலையாள ரசிகர்களும் தனது அட்டகாசமான நடிப்பால் நிச்சயமாக சாண்டி கவர்ந்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியானது. அந்த படத்தில் இடம்பெற்ற பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதிலும் குறிப்பாக மோனிகா பாடல் காட்சியில் மலையாள நடிகர் சௌபின் சாஹிரின் ஆவேசமான நடனத்தை பார்த்து ரசிக்காத ரசிகர்களை இருக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடல் நடனக் காட்சியை அமைத்தவர் சாண்டி மாஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்