- Advertisement -
முதல்வர் விஜயுடன் நெருக்கமான நட்பில் இருக்கும் நடிகை திரிஷாவை அடுத்த முதல்வர் என்று பலரும் கிண்டலாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் நெல்லையில் இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை என்ற நற்பணி இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. பதவிக்காக அல்ல; தமிழக மக்களின் உரிமைக்காக என்ற வாசகத்துடன் லோகோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை திரிஷாவின் ஒப்புதல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ராஜகோபால் என்பவர் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டு பேரவை துவங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





