- Advertisement -
Homeபொழுதுபோக்குதவெக ஆதரவாளரா நீங்க? என் நட்பு வட்டத்தில் நீங்க இருக்க வேண்டாம், ப்ளீஸ் விலகிடுங்க -...

தவெக ஆதரவாளரா நீங்க? என் நட்பு வட்டத்தில் நீங்க இருக்க வேண்டாம், ப்ளீஸ் விலகிடுங்க – முதல்வர் விஜய் சைகையால் முகநூலில் டிரண்டிங் ஆன பதிவு!

- Advertisement -

கடந்த திங்கட்கிழமை தமிழக சட்டசபையில் பேசிய முதல்வர் விஜய், காவல்துறை மானியக் கோரிக்கை குறித்து பேசினார். ஆனால் எதிர்கட்சி தரப்பில் கேட்கப்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு பதில் தராமல் திமுக குறித்தும் அதன் தலைவர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஒருகட்டத்தில் மிசாவை சந்தித்தவர்கள் திமுகவினர் என்று கூறி தனது தாடையை கையால் தட்டிக் காட்டி கிண்டலடித்தார். அதாவது மிசா அவசர காலத்தில் கைதான போது ஸ்டாலின் தாடையில் தாக்கப்பட்டதால் அவரது தாடை சேதமடைந்த சம்பவத்தை மறைமுகமாக சுட்டிக்காட்டி நக்கல் செய்திருந்தார்.

- Advertisement -

ஏற்கனவே எங்கே உங்க அப்பாவை காணோம் என்று விஜய் நக்கல் செய்த நிலையில் இப்போது இப்படி ஒரு சைகை மூலம் ஸ்டாலினை அவமானப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. எனினும் இது ஏதேச்சையாக செய்த உடல்மொழி, யாரையும் குறிப்பிட்டு அல்ல என்று விஜய் விளக்கம் தந்துள்ளார். இந்த நிலையில் முகநூலில் தவெக நட்பை விலக்கிக் கொள்ளும் பதிவு டிரண்டிங் ஆகி வருகிறது. அதில் பலரும் இந்த பதிவை செய்து வருகின்றனர்.

என் நட்பு வட்டத்தில் தவெக ஆதரவாளர்களோ அரசியல் கூட்டாளிகளோ விஜய் ரசிகர்களோ யாராவது இருந்தால், தயவுசெய்து நீங்களாகவே உடனடியாக என் Friend List-லிருந்து விலகிவிடுங்கள். இதில் எந்த வித விவாதத்திற்கும், விளக்கத்திற்கும், சமரசத்திற்கும் இடமில்லை. நீங்கள் என் நீண்டகால நண்பராக இருந்தாலும் சரி, உறவினராக இருந்தாலும் சரி, பழைய பணியிட நண்பராக இருந்தாலும் சரி, அல்லது ஒருகாலத்தில் நான் மிகவும் மதித்தவராக இருந்தாலும் சரி இந்த விஷயத்தில் என் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை.

- Advertisement -

டிவிகே ஆதரவாளர்களுடனோ, அரசியல் கூட்டாளிகளுடனோ, விஜய் ரசிகர்களுடனோ அரசியல் குறித்து விவாதிக்கவோ, கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளவோ இனி எனக்கு விருப்பமில்லை. இது வெறுமனே ஒரு கட்சி அல்லது ஒரு நடிகர் மீதான வெறுப்பு அல்ல இது அரசியல் மதிப்புகள் பற்றியது. இது அறநெறி பற்றியது. இது சமூகப் பொறுப்புணர்வு பற்றியது. தமிழ்நாடு எந்தப் பாதையில் பயணித்து இந்த அரசியல் விழிப்புணர்வை அடைந்திருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். எத்தனை போராட்டங்கள், எத்தனை அடக்குமுறைகள், எத்தனை தியாகங்களுக்குப் பிறகு இன்று நாம் பெற்றிருக்கும் சமூக அரசியல் உரிமைகள் உருவாகியிருக்கின்றன என்பதும் தெரியும்.

அந்த வரலாற்றையும், அந்தப் போராட்டங்களையும் மதிக்காமல், அரசியலை வெறும் ரசிகர் மனநிலையிலும், தனிநபர் வழிபாட்டிலும் சுருக்கிப் பார்க்கும் அரசியல் எனக்கு ஏற்புடையதல்ல. எனவே, நமது அரசியல் மதிப்புகளும் அடிப்படை அறநெறிகளும் ஒன்றல்ல என்றால், நட்பும் தொடர வேண்டிய அவசியமில்லை. So, TVK supporters & Vijay fans Please leave my Friend List என்று அந்த பதிவில் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்