- Advertisement -
Homeபொழுதுபோக்குகேம்சேஞ்சர் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போ நடக்குதுன்னு தெரியுமா, அட இப்பவும்...

கேம்சேஞ்சர் படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போ நடக்குதுன்னு தெரியுமா, அட இப்பவும் நான் பிரமாண்ட இயக்குனர்தான்னு ஷங்கர் நிரூபிச்சிட்டாரே?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வருகிற ஜனவரி மாதம் 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்த படத்தை தில் ராஜூ தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இந்தியன் 2 தோல்வியை தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பில் கேம் சேஞ்சர் படம் ரிலீஸாக இருக்கிறது.

கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, நாசர், சமுத்திரக்கனி, எஸ்ஜே சூர்யா, ஜெயராம், அஞ்சலி, சுனில், நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு மேல் ஷூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், இந்த படம் இன்னும் 2 மாதங்களில் திரைக்கு வர இருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் கேம் சேஞ்சர் படத்தின் இசை வெளியீட்டு விழா, வருகிற டிசம்பர் மாதம் 21ம் தேதி, அமெரிக்காவில் நடைபெற உள்ளதாக தெரிய வந்துள்ளது. துவக்கத்தில் சென்னையிலும், அடுத்து ஐதராபாத், டெல்லி, மும்பை என பிற மாநிலங்களில் நடந்த தமிழ் படங்களின் இசை வெளியீட்டு விழா, சிங்கப்பூர் துபாயை தொடர்ந்து இப்போது அமெரிக்காவில் முதன்முறையாக கேம் சேஞ்சர் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது.

இந்த விழாவில் ஷங்கரின் நெருங்கிய நண்பரும், நடிகர் கமல்ஹாசனும் கலந்துக்கொள்வார் என்று கூறப்பட்டது. ஏனெனில் அமெரிக்காவில் 45 நாட்கள் தங்கி, கமல்ஹாசன் தற்போது ஏஐ தொழில்நுட்ப பயிற்சி வகுப்பில் பங்கேற்று வருகிறார். அதனால் அமெரிக்காவில் நடக்கும் இந்த விழாவில் கமல் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் முதல் வாரத்திலோ கமல்ஹாசன், அமெரிக்காவில் இருந்து திரும்பி வந்து விடுவதால் அவர் கேம் சேஞ்சர் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஷங்கர் விரும்பி அழைக்கும் பட்சத்தில் சென்னையில் இருந்து கூட மீண்டும் அமெரிக்கா கிளம்பிச் செல்ல கமல் தயங்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

அதற்கு காரணம், கமல், ஷங்கர் இருவரும் இணைந்துள்ள இந்தியன் 3 படம் இன்னும் ரிலீஸாக இணைந்து செயல்பட இருப்பதும் முக்கிய காரணம். அமெரிக்காவில் கேம் சேஞ்சர் இசை வெளியீட்டு விழாவை நடத்துவதன் மூலம் ஷங்கர் மீண்டும் அவர் பிரமாண்ட இயக்குனர்தான் என்பதை நிரூபித்துவிட்டார் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதே போல் பல மொழிகளில் தயாரான பான் இந்தியா படம் கேம் சேஞ்சர் என்பதால் லக்னோ உள்ளிட்ட பல இடங்களில் பிரமோ நடத்தவும் படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்