- Advertisement -
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது, இளையராஜா ஏஆர் ரகுமானை தவிர்த்து இப்பொழுது உள்ள இளம் இசை அமைப்பாளர்களின் பாடல்களில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு பாடலை சொல்லுங்க. அனிருத் இசையிலே அப்படி ஒரு பாடலை சொல்ல முடியுமா? இசை முன்ன மாதிரி இல்லே. இதை யாரும் இப்போ ஒத்துக்கிறது இல்லை. பாஷையே தெரியாமல் பாடல் போடுகிறார்கள். புதிய ஸ்டைலில் நன்றாக இருக்கிறது தான். ஆனால் தமிழுக்கு உரிய முக்கியத்துவத்தை அவர்கள் கொடுக்கவில்லை. அதுதான் உண்மை என்று கங்கை அமரன் கோபமாக பேசியிருக்கிறார்.





