தெலுங்கில் விஜய் தேவர கொண்டா ஹீரோவாக நடித்த கீதா கோவிந்தம் படம், தமிழில் ரிலீசாக அதன்மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகத்தை பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. அதன்பிறகு புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் மூவியாக அமைந்தது.
புஷ்பா படம் மூலம் பிரபலமடைந்த ராஷ்மிகா மந்தனா தொடர்ந்து தமிழில் 2 படங்களில் நடித்தார். நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்திலும், அடுத்து நடிகர் விஜயுடன் வாரிசு படத்திலும் ஹீரோயினாக நடித்தார். ஆனால் இரண்டு படங்களுமே பெரிய வெற்றியை பெறவில்லை. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தமிழில் ராஷ்மிகாவுக்கு கிடைக்கவில்லை.
இதையடுத்து, பாலிவுட் பக்கம் தன் திறமையை காட்டச் சென்றார் ராஷ்மிகா. கவர்ச்சியில் தாராளம் காட்டினால் மட்டுமே இந்தி, தெலுங்கு படவுலகில் படங்களில் நடிக்க முடியும். இதற்கு சிறந்த உதாரணமாக, தமிழில் ஹோம்லியாக நடித்த அட்டக்கத்தி நந்திதா, இப்போது தெலுங்கில் ஐட்டம் பாட்டுக்கு ஆடும் கவர்ச்சி நடிகையாக மாறி விட்டார்.
அதே போல் கல்லூரி படத்தில் நடித்த தமன்னா, பாலிவுட்டில் ஐட்டம் நடிகையாக மாறிவிட்டார். காதலருடன் டேட்டிங் செல்வது, நைட் பார்ட்டிகளில் குத்தாட்டம் போடுவது, வெப் சீரிஸ்களில் படுக்கையறை காட்சிகளில் நடிப்பது என, தமன்னா வேறு லெவலில் சென்றுவிட்டார். ஜெயிலர் படத்தில் காவாலா பாட்டுக்கு அவர் ஆடிய கவர்ச்சி நடனம், தமிழக ரசிகர்களை திணறடித்தது.
இந்த நிலையில், பாலிவுட்டுக்கு சென்ற ராஷ்மிகா மந்தனாவும் தனது திறமையை காட்ட, உடையை குறைத்து எல்லையற்ற கவர்ச்சி காட்ட துணிந்துவிட்டார். விரைவில் மேலாடை அணியாமல் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவும் அவர் கமிட் ஆனதாக கூறப்படுகிறது. ரன்வீர் கபூர் ஜோடியாக அவர் நடித்த அனிமல் படம் கடும் விமர்சனத்தில் சிக்கினாலும் 900 கோடி ரூபாய் வரை வசூலை குவித்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிக்கும் 51வது படம், புஷ்பா 2ம் பாகம், ரெயின்போ, அனிமல் 2 படங்களில் நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிதாக ஒரு பெருமை கிடைத்துள்ளது. அதாவது சர்வதேச ஊடக நிறுவனம் போர்ப்ஸ் இதழில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவோர் பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான 30 வயதுக்குட்பட்ட 30 பிரபலங்களின் பட்டியலில் பொழுதுபோக்கு பிரிவில், நடிகை ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார். ஐட்டம் நடிகையாக எக்கச்சக்க கவர்ச்சி காட்டி, இப்படி ஒரு பெருமை ராஷ்மிகாவுக்கு கிடைத்து விட்டதே என, நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.





