- Advertisement -
Homeபொழுதுபோக்குநீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு… தி கோட் படப்பாடல் குறித்து கங்கை அமரன் சொன்ன...

நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு… தி கோட் படப்பாடல் குறித்து கங்கை அமரன் சொன்ன ஆச்சரிய தகவல் – உருட்டுல இது வேற லெவலா இருக்குதே!

- Advertisement -

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், விஎப்எக்ஸ் தொழில்நுட்ப பணிகள், அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்து வருகின்றன.

இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற 2 கேரக்டரில் நடித்துள்ளார். இதுதவிர ஒரு கேரக்டரிலும் சில காட்சிகள் விஜய் வருகிறார்.விஜய்க்கு சினேகா, மீனாட்சி சவுத்ரி என்ற 2 ஜோடிகள் உள்ளனர். இதுதவிர லைலா, ரம்யாகிருஷ்ணன், கனிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வில்லன் கேரக்டரில் மைக் மோகன், நண்பர்களாக பிரசாந்த், பிரபுதேவாவும் நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

வரும் செப்டம்பர் மாதம் 5ம் தேதி, இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலத்தில் திரைக்கு வருகிறது. அதற்கு முன்பாக இடையிடையே தி கோட் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு, ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது. இன்னும் சில வாரங்களில் படத்தின் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 சிங்கிள்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தில், விசில் போடு பாடல் காட்சி வெளியானது. விஜய் பிறந்த நாளன்று ஜூன் 22ம் தேதி, சின்ன சின்ன கண்ணிலோ என்ற பாடல் காட்சி வெளியானது. இப்போது இரு தினங்களுக்கு முன், நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு பாடல் வெளியிடப்பட்டது.

- Advertisement -

இதுவரை வெளியான 3 பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. பாடல்களில் எந்தவிதமான ஈர்ப்பும், உற்சாகமும் இல்லை. அதிலும் 3வது சிங்கிளாக வெளியான நீ கண்ணால பார்த்தா ஒரு ஸ்பார்க்கு பாடல் காட்சியில் விஜயின் இளமைத்தோற்றம் ரசிகர்களை வெறுப்படைய செய்திருக்கிறது. இந்த பாடலை எழுதியவர் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பாடல் குறித்து சமீபத்தில் பேசிய கங்கை அமரன், நான் நிறைய பாடல்கள் எழுதியிருந்தாலும், விஜய்க்கான எழுதிய முதல் பாடல் இது. என் மகனை போல விஜயை நினைக்கிறேன். பல மாதங்களுக்கு முன் எழுதிய இந்த பாடலை நான் மறந்தே போய்விட்டேன். இந்த பாடல் எழுதிய போது எனக்கு உடல் நலமில்லை. என்றாலும் யுவன் டியூனை அனுப்பிய பிறகு 10 நிமிடங்களில் இந்த பாடல் வரிகளை எழுதி அனுப்பி விட்டேன், என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்