- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறன் கதையை இயக்கும் பிரபல இயக்குனர், படத்தின் நாயகன் சிம்புவா? - போடறா வெடிய, தரமான...

வெற்றிமாறன் கதையை இயக்கும் பிரபல இயக்குனர், படத்தின் நாயகன் சிம்புவா? – போடறா வெடிய, தரமான சம்பவம் ரெடி ஆகுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சில வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றவர் இயக்குனர் கௌதம் மேனன். அவரது இயக்கத்தில் வெளியான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணை தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத படங்களை இருக்கின்றன.

இயக்குனராக இருந்த கௌதம் மேனன், பிறகு படங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்தார். நடிப்பிலும் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். கடந்தாண்டில் வெளியான விடுதலை, லியோ படங்களில் கௌதம் மேனன் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வரும் 20ம் தேதி வெளியாக உள்ள விடுதலை 2 படத்திலும் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

- Advertisement -

பல வெற்றிப் படங்களை தந்த இயக்குனர் வெற்றிமாறன், ஒரு நடிகராக தனது பயணத்தை தொடர்வது மட்டுமின்றி, மீண்டும் ரசிகர்களுக்கு தனது இயக்கத்தில் பழையபடி வெற்றிப் படங்களை தர முயற்சித்து வருகிறார். ஆனால் அவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இதுவரை தனது சொந்த கதையை திரைப்படமாக்கிய கௌதம் மேனன், தற்போது அந்த முடிவை கைவிட்டுள்ளார். பிறர் எழுதிய கதை, திரைக்கதை, வசனத்தில் வெற்றிப் படத்தை இயக்கும் ஒரு அதிரடி முடிவுக்கு வந்துள்ளார். அதன்படி இயக்குனர் வெற்றிமாறனை, கௌதம் மேனன் அணுகியுள்ளார். ஏனெனில் விடுதலை படங்களில் நடித்த வகையில் இருவருக்கும் நல்ல புரிதல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதனால் இயக்குனர் வெற்றிமாறன் எழுதிய கதை, திரைக்கதை வசனத்தில் ஒரு படம் இயக்க அவரிடம் கேட்டுள்ளார். அவரும் மனப்பூர்வமாக ஓகே சொல்லிவிட்டார். இதையடுத்துவெற்றிமாறன் கதையை இயக்குனர் கௌதம் மேனன் திரைப்படமாக உருவாக்குகிறார்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பவர் நடிகர் சிம்புதான். ஏற்கனவே விண்ணை தாண்டி வருவாயா, வெந்து தணிந்தது காடு போன்ற சிம்பு படங்களை இயக்கிய கௌதம் மேனன், வெற்றிமாறன் எழுதிய கதையில் நடிகர் சிம்புவை வைத்து படம் இயக்குவதை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

- Advertisement -

சற்று முன்