- Advertisement -
Homeபொழுதுபோக்குஅலப்பரை தாங்க முடியலையேப்பா, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அல்டாப்பு பேர்வழியா? - ஷூட்டிங் ஸ்பாட்டில்...

அலப்பரை தாங்க முடியலையேப்பா, தமிழ் சினிமாவில் இப்படி ஒரு அல்டாப்பு பேர்வழியா? – ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகர் கவின் மீது ஏகப்பட்ட புகார்

- Advertisement -

சினிமாவில் இப்போதும் ரஜினிகாந்த் குறித்து பலரும் பெருமிதமாக பேசுவதற்கு காரணம், சூப்பர் ஸ்டாராக 45 ஆண்டுகளாக இருந்தும் பெயர், புகழில் உச்சத்தில் இருந்தும் அதுபற்றிய எண்ணமே இல்லாமல், ரஜினிகாந்த் மற்றவர்களிடம் எளிமையாக நடந்துக்கொள்ளும் விதம்தான். 170 படங்களில் நடித்தும், 73 வயதிலும் இன்னும் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டரை பார்த்தால் எழுந்து நின்று மரியாதை தரும் பண்பு கொண்டவர் ரஜினிகாந்த்.

அதே போல் நடிகர் விஜயும் நல்ல பண்பாளராக மற்றவர்களால் மதிக்கப்படுகிறார். ரஜினிக்கு அடுத்த நிலையில், மக்களிடம் அதிக செல்வாக்கு பெற்ற நபராக கணிக்கப்படுபவர் விஜய்தான். ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையிலும், விஜய் எப்போதுமே அமைதியின் வடிவமாக தான் படப்பிடிப்பு தளத்தில் இருப்பார். மற்றவர்களிடம் அனாவசியமாக பேசுவதோ, தன் மாஸ் என்ன என்று காட்டுவதோ அவரது பழக்கம் கிடையாது.

- Advertisement -

இப்படி சினிமாவில் பெரிய இடத்தில் இருந்தும், தன்னை சாதாரணமான மனிதராக காட்டிக் கொள்ளும் கலைஞர்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். ஆனால் ஒரு சிலர், ஓரிரு படங்கள் வெற்றி பெற்று விட்டாலே, வானத்தில் இருந்து குதித்து வந்த நட்சத்திரங்களை போல, தங்களை மிக உயர்வாக நினைத்துக்கொண்டு பயங்கரமாக சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

நடிகர் கவின், விஜய் டிவியில் சில சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். அதன்பிறகு விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்துக்கொண்டார். அப்போது மற்றொரு போட்டியாளராக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவை லவ் செய்தார். அவர் பின்னாடியே வீட்டுக்குள் சுற்றி சுற்றி வந்த வகையில், பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

- Advertisement -

தொடர்ந்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு டாடா, லிப்ட் என்ற 2 படங்களில் நடித்தார். இந்த 2 படங்களுமே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. இந்நிலையில் கவின், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில் ஏகப்பட்ட அலப்பரை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. அதாவது, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துவிட்டு கேரவனுக்குள் சென்று அமர்ந்து விட்டால், மணிக்கணக்கில் வெளியே வரமாட்டார். இதனால் படக்குழுவினர் டென்சன் ஆவது அடிக்கடி நடக்கிறது.

சமீபத்தில், ஷூட்டிங் ஸ்பாட்டில் தனக்கு பாதுகாப்பாக வந்த பவுன்சர்களை கண்டபடி திட்டி இருக்கிறார். ஏனெனில் அவர்களை மீறி சில ரசிகர்கள் உள்ளே வந்து, கவினுடன் செல்பி எடுத்துள்ளனர். எப்படி அவர்களை உள்ளே விட்டீர்கள் என எகிறி இருக்கிறார். அதுமட்டுமின்றி ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவருடன் பயங்கரமாக மல்லுக்கட்டி, நீங்கள் சொல்கிறபடி எல்லாம் என்னால் ஸ்டண்ட் பண்ண முடியாது என்று பிரச்னை செய்திருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர்கள், டான்ஸ் மாஸ்டர்களை பெரிய நடிகர்களே கால் தொட்டு வணங்கி, அவர்கள் சொல்கிறபடி நடிப்பார்கள். அப்படிப்பட்ட நிலையில் ஸ்டண்ட் மாஸ்டரிடமே சண்டைக்கு போன கவினை பார்த்து, ஓவர் சேட்டையாக இருக்குதேப்பா என படக்குழுவினர் தலையில் அடித்துக் கொண்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்