- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் முதலில் நடிக்க இருந்ததே அவர்தான், எனக்கு பதிலா ஜெமினி கணேசனை நடிக்க வைங்க...

அந்த படத்தில் முதலில் நடிக்க இருந்ததே அவர்தான், எனக்கு பதிலா ஜெமினி கணேசனை நடிக்க வைங்க சொன்னதும் அவர்தான் – இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என்று முதன்முறையாக அழைக்கப்பட்டவர் நடிகர் ஜெமினி கணேசன்தான். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் அவர் காதல் மன்னன்தான். 5 திருமணங்கள் செய்துக்கொண்டவர் என்ற பெருமைக்குரியவர். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

ஜாம்பவான் நடிகர்கள் எம்ஜிஆர் சிவாஜி கணேசன் காலத்திலேயே முன்னணி ஹீரோவாக பல படங்களில் நடித்தவர். எம்ஜிஆருடன் முகராசி என்ற படத்திலும் இணைந்து நடித்திருக்கிறார். பிறகு உன்னால் முடியும் தம்பி மேட்டுக்குடி அவ்வை சண்முகி பொன்மனச் செல்வன் போன்ற சில படங்களிலும் வயதான கேரக்டரில் அட்டகாசமான நடிப்பை தந்திருந்தார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியதாவது, அவ்வை சண்முகி படத்தில் முதலில் கமலுக்கு மாமனாராக மீனாவின் தந்தையாக நாங்கள் நடிக்க கமிட் செய்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தான். அவரும் கதையை கேட்டு ஓகே சொல்லி விட்டார்.

ஆனால் பிறகு சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் என்னிடம் போனில் பேசினார். அப்பாவுக்கு இருதய பிரச்னை இருப்பதால் அமொிக்காவுக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்கிறோம். அதனால் அவ்வை சண்முகி படத்தில் அப்பா நடிக்க வாய்ப்பில்லை என்று மறுத்து விட்டார். நாங்கள் சரி என்று சொல்லும்படி ஆகிவிட்டது.

- Advertisement -

அதன்பிறகு கமல்ஹாசன் சிவாஜியுடன் பேசியிருக்கிறார். அப்போது என்னடா செய்வது? எனக்கு உன்கூட நடிக்க ஆசைதான். பசங்க அமெரிக்காவுக்கு போகணும்ன்னு சொல்லிட்டாங்க. என்ன பண்றது என்று வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

அப்போது சிவாஜி கணேசன், அவர் நடிக்க வேண்டிய அந்த அவ்வை சண்முகி கேரக்டர் பற்றி பேசும் போது, யாரையும் காதலிக்கிற ஒரு கேரக்டர் என்றால் அதுக்கு ஜெமினி கணேசனை நடிக்க வை. அவர்தான் அதற்கு சரியாக இருப்பார் என்று கமலிடம் ஐடியா கூறியிருக்கிறார். அதன்பிறகு தான் அவ்வை சண்முகி படத்தில் ஜெமினி கணேசனை கமிட் செய்தோம் என்று இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்