- Advertisement -
Homeபொழுதுபோக்குதி கோட் டிரெய்லர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம், தயாரிப்பு நிறுவனம் இயக்குனருக்கு போட்ட...

தி கோட் டிரெய்லர் ரிலீஸ் தேதி திடீர் மாற்றம், தயாரிப்பு நிறுவனம் இயக்குனருக்கு போட்ட கிடுக்கிப்பிடி உத்தரவு – வெங்கட்பிரபு மேஜிக் எடுபடுமா?

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி ரிலீஸ்க்கு தயாராகி வருகிற படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். சுருக்கமாக தி கோட் என அழைக்கப்படும் இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என்ற 2 ரோல்களில் நடித்திருக்கிறார். இதுதவிர மற்றொரு கேமியோ ரோலிலும் விஜய் சில காட்சிகளில் வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் போன்றவர்கள் இந்த படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதில் நடிகர் மைக் மோகன் வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மீனாட்சி சவுத்ரி, சினேகா, ரம்யா கிருஷ்ணன், லைலா, கனிகா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தில் மறைந்த நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், சின்ன கலைவாணர் என அழைக்கப்படும் விவேக் ஆகியோர், ஏஐ தொழில்நுட்பத்தில் சில காட்சிகளில் வர உள்ளனர். அத்துடன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயனும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு முக்கியமான தகவலாக, ஒரு குத்தாட்ட பாடலுக்கு நடிகை திரிஷா, நடிகர் விஜயுடன் ஆடியிருக்கிறார். இதுவரை இதுபோல் மற்ற கதாநாயகிகள் நடித்த படத்தில் திரிஷா ஒரு அயிட்டம் பாட்டுக்கு குத்தாட்டம் போட்டவர் இல்லை. ஆனால் விஜய்க்காக இந்த படத்தில் திரிஷா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தி கோட் படத்தில் இருந்து இதுவரை 3 பாடல்கள் வெளியான நிலையில் எந்த பாடலுமே பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் வருகிற 19ம் தேதி தி கோட் ட்ரெயிலர் வெளியிட இருந்தனர். ஆனால் அதற்கு 4 நாட்கள் முன்னதாக ஆகஸ்ட் 15ம் தேதி, தேசிய விடுமுறை தினம் என்பதால் அன்று தி கோட் படம் ட்ரெயிலரை வெளியிட ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் முடிவு செய்துள்ளனர்.

தி கோட் ட்ரெயிலர் பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்ய வேண்டும். படத்தில் முத்தாய்ப்பாக உள்ள அனைத்து விஷயங்களும் ட்ரெயிலரில் வர வேண்டும். அப்போதுதான் படம் குறித்த ஒரு பாசிட்டிவ் எனர்ஜி ஏற்படும் என்று இயக்குனர் வெங்கட்பிரபுவுக்கு தயாரிப்பு நிறுவனம் நிபந்தனை விதித்துள்ளது. எனவே, ட்ரெயிலர் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறும் வகையில் உருவாக்க வெங்கட்பிரபு தீவிரம் காட்டி வருகிறார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தி கோட் ட்ரெயிலர் ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

சற்று முன்