- Advertisement -
Homeபொழுதுபோக்குஎங்களை ஒரு பொருட்டாவே மதிக்கலே, அந்த நிகழ்ச்சியில் எங்களை சேர்த்துக்கலே - திரைப்பட எழுத்தாளர் சங்கத்...

எங்களை ஒரு பொருட்டாவே மதிக்கலே, அந்த நிகழ்ச்சியில் எங்களை சேர்த்துக்கலே – திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் சேரன் கோபம்!

- Advertisement -

சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா மற்றும் இயக்குனர் கே பாக்யராஜ் இருவரும் அடுத்தடுத்து மறைந்தனர். குருநாதர் பாரதிராஜாவை தொடர்ந்து அவரது சிஷ்யன் கே பாக்யராஜூம் திடீரென மறைந்தது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இயக்குனர்களாக வரலாறு படைத்த ஜாம்பவான்கள் பாரதிராஜா கே பாக்யராஜ் ஆகியோருக்கு பெப்சி அமைப்பு தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தயாரிப்பாளர் சங்கங்கள் இணைந்து நினைவு விழா நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இந்த விழா வருகிற 16ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

- Advertisement -

நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் கலந்துக்கொள்ளும் இந்த நிகழ்ச்சியை தமிழக முதல்வர் விஜய் துவங்கி வைப்பார் என்றும் கூறப்படுகிறது. ராஜகோபுரங்கள் நினைவு உற்சவம் என்று இந்த விழாவுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்குனர்கள் பாரதிராஜா பாக்யராஜ் ஆகியோருக்கு மணிமண்டபங்களும் அவர்களது சிலைகளும் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இந்த விழாவை நடத்துவதற்கு மற்ற சங்கங்களுடன் தங்களது சங்கத்தை இணைத்துக் கொள்ளவில்லை என்று கூறி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் இந்த விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் இயக்குனர் சேரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, பெப்சி மற்றும் இயக்குனர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பாரதிராஜா கே பாக்யராஜ் நினைவு விழாவில் திரைப்படத்துறைக்கு அடிப்படையான எழுத்தாளர் சங்கத்தை முறையாக அழைக்கவில்லை.

- Advertisement -

திரைப்படங்களின் முதுகெலும்பாக இருக்கும் எழுத்தாளர்களின் நியாயமான உரிமைகளையும் அவர்களின் சங்கத்தையும் தொடர்ந்து ஓரங்கட்டி புறக்கணித்து வருகிறார்கள். இந்த விழாவில் கலந்துகொள்ள பல வகையில் முயற்சித்தும் எங்களது உணர்வுகள் மதிக்கப்படவில்லை. அதனால் இந்த நிகழ்வில் நாங்கள் கலந்து கொள்ள இயலவில்லை. சங்க உறுப்பினர்களின் சுயமரியாதையை காக்கும் பொருட்டு இந்த முடிவை எடுத்துள்ளோம்.

வரும் காலங்களிலாவது தாய் அமைப்பான பெப்சி எங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த பதிவில் இயக்குனர் சேரன் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இயக்குனர் கே பாக்யராஜ் அவர் மறையும்போது திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்