- Advertisement -
Homeபொழுதுபோக்குஜனநாயகன் படத்தை திருவிழாவாக கொண்டாட தயாரான தவெக, களத்தில் இறங்கிய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் - முதல்...

ஜனநாயகன் படத்தை திருவிழாவாக கொண்டாட தயாரான தவெக, களத்தில் இறங்கிய அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் – முதல் நாளில் 5 காட்சிகளும் ஹவுஸ்புஃல்!

- Advertisement -

முன்னாள் திரைப்பட நடிகர் இன்றைய தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 23ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. 6 மாதங்கள் தாமதமாக இந்த படம் திரைக்கு வருகிறது. உலகம் முழுவதும் 8000 தியேட்டர்களில் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில் ஜனநாயகன் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

இதற்கு முன்பு நடிகர் விஜய் நடித்த லியோ படம் தமிழ்நாட்டில் மட்டும் 720 தியேட்டர்களில் ரிலீசானது. இப்போது ஜனநாயகன் படம் தமிழ்நாட்டில் மட்டும் 800 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. தமிழக முதல்வர் விஜய் நடித்த கடைசி படம் ஜனநாயகன் என்பதால் இந்த படத்தை திருவிழாவாக கொண்டாட வேண்டும் என்று அமைச்சர் புஸ்லி ஆனந்த் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையடுத்து மாவட்டம் வாரியாக அமைச்சர்களும் தொகுதி வாரியாக எம்எல்ஏக்களும் ஜனநாயகன் படத்துக்காக களத்தில் இறங்கி உள்ளனர். அவர்களே ஏராளமான டிக்கெட்டுகளை வாங்கி குவித்து விட்டதாக தெரிய வந்துள்ளது. முதல் நாள் காட்சிகள் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்துள்ளன. முதல் நாளில் சிறப்பு காட்சியுடன் 5 காட்சிகளுக்கான அனைத்து டிக்கெட்டுகளும் புக்கிங் செய்யப்பட்டு விட்டன.

பல தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் ஓபன் ஆகாத நிலையில் ஆஃப் லைனிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் முதல் நாள் நிலவரம் தான் இவ்வாறு உள்ளது. மற்றபடி 24ம் தேதி தியேட்டர்களில் டிக்கெட் புக்கிங் எளிதாக பண்ணும் அளவுக்கு ஃப்ரீயாக இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

வழக்கமாக விஜய் படம் என்றாலே அவரது முந்தைய படத்தின் சாதனையை அடுத்து வரும் படம் முறியடிக்கும் என்பதுதான் வழக்கம். அந்த வகையில் லியோ படம் 720 தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸ் ஆன நிலையில் ஜனநாயகன் படம் 800 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடைசியாக விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படம் மொத்தம் 445 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்தது.

2024ம் ஆண்டில் தமிழில் அதிக வசூல் சாதனை செய்த படமாகவும் முதலிடத்தில் இருந்தது. இப்போது ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படம் எந்த அளவுக்கு வசூலை குவிக்கப் போகிறது? நடிகர் விஜயின் முந்தைய படங்களின் சாதனைகளை முதல்வர் விஜயின் ஜனநாயகன் படம் முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பும் ஆர்வமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆனால் இது பகவந்த் கேசரி என்ற பாலய்யா நடித்த தெலுங்கு படத்தின் ரீ மேக் என்பதால் ஆந்திரா தெலுங்கானா பகுதிகளில் போதிய வரவேற்பு இருக்காது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்