- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா… கல்கி 2898 படம் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? - மேக்கிங் வேற...

அடேங்கப்பா… கல்கி 2898 படம் முதல் நாள் வசூலே இத்தனை கோடியா? – மேக்கிங் வேற லெவல்லுன்னு சொல்றாங்க – ஆனா கதைதான்.. குழப்பத்தில் ரசிகர்கள்!

- Advertisement -

சினிமா ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று, பிரபாஸ் நடிப்பில் உருவான கல்கி 2898 ஏடி படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் அமிதாப் பச்சன், விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகர் கமல்ஹாசன் வில்லன் கேரக்டரில் நடித்துள்ளதாக தெரிகிறது.

750 கோடி ரூபாய்க்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை டைரக்டர் நாக் அஸ்வின் டைரக்ட் செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்துக்கு இசை அமைத்துள்ளார். ஆனால் பாடல் எதுவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனதாக தெரியவில்லை. பிஜிஎம் இசை மட்டுமே ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றதாக, மிரட்டலாக இருக்கிறது.

- Advertisement -

இந்திய சினிமாவை பொருத்தவரை இப்போது பட்ஜெட் படங்களை தயாரிக்கவும், அதில் நடிக்கவுமே பெரிய நடிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் பான் இந்தியா படங்களாக அவை உருவாக்கப்பட்டு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பிறமொழிகளில் வெளியிடுவதோடு, அந்தந்த மொழியில் ஸ்டார் நடிகர்களாக உள்ளவர்களையும் நடிக்க வைத்து, ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்த படம், ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் ஒரு கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் புராணக் கதையும், அட்வான்ஸ் டெக்னாலஜி கலந்தும் இந்த கதையும், திரைக்கதையும் உருவாக்கப்பட்டுள்ளதால் இதன் 2ம் பாகம் வெளிவந்தால் மட்டுமே, படத்தின் கதையை முழுமையாக ரசிகர்கள் புரிந்துக்கொள்ள முடியும். அந்த வகையில் முதல் பாகத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு முழுமையான கதை கிடைக்காது, அவரவர் அனுமானங்களின்படி கதையை தீர்மானித்துக் கொள்ளலாம்.

- Advertisement -

எனினும் பாகுபலி படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு பிரபாஸ் பான் இந்தியா ஸ்டாராக மாறிவிட்டதால், இந்த படம் ஏற்கனவே மிகப்பெரிய ஒரு எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி விட்டது. எனினும் முதல் பாகத்தை பார்க்க, உலகம் முழுவதும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டிய நிலையில், எதிர்பார்த்த வசூல் கிடைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் நேற்று வெளியான இந்த கல்கி 2898 ஏடி திரைப்படம், உலகம் முழுவதும் மொத்தம் 175 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது. தமிழகத்தில் மட்டும் ரூ.5.8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுககையில் தமிழகத்தில் வசூல் குறைவுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்