- Advertisement -
Homeபொழுதுபோக்குசஸ்பென்ஸ் சஸ்பென்ஸ்னு சொல்லிட்டு அத்தனை விஷயங்களையும் அவிழ்த்து விடும் கோட் திரைப்படக் குழு... இதுக்கு மேல...

சஸ்பென்ஸ் சஸ்பென்ஸ்னு சொல்லிட்டு அத்தனை விஷயங்களையும் அவிழ்த்து விடும் கோட் திரைப்படக் குழு… இதுக்கு மேல படத்துல என்னதான் இருக்கு என எழும் கேள்வி…

- Advertisement -

விஜய் நடித்திருக்கும் கோட் திரைப்படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. இதனை ஒட்டி முன்னணி திரையரங்குகளில் ஆன்லைன் புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது. புக்கிங் தொடங்கிய அனைத்து தியேட்டர்களிலுமே முதல் நாளுக்கான டிக்கெட்டுகள் ஒரு சில நிமிடங்களில் விற்று தீர்ந்து விட்டன.

 

- Advertisement -

செப்டம்பர் 5ஆம் தேதி படம் வெளியாகும் நிலையில், ஆறு மற்றும் ஏழு ஆகிய தேதிகளிலும் படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெங்கட் பிரபு இயக்கம், யுவன் சங்கர் ராஜாவின் இசை, படத்தில் நடித்திருக்கும் பிரம்மாண்ட நட்சத்திர கூட்டணி போன்றவற்றால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது.

 

- Advertisement -

இதில் தந்தை மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் நடித்திருக்கிறார். கொரோனா காலத்தில் தான் இந்த கதையை தான் எழுதியதாகவும், முதலில் தந்தை கதாபாத்திரத்தில் ரஜினிகாந்தையும் மகன் கதாபாத்திரத்தில் தனுசையும் கற்பனை செய்து தான் திரைக்கதையை வடிவமைத்ததாகவும் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியிருந்தார்.

 

இந்தத் திரைப்படத்தில் தந்தை விஜய் கதாபாத்திரத்திற்கு காந்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் அவர் டைட்டிலாகவும் வைக்க முடிவு செய்தாராம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் கொடுத்த யோசனையின்படி அதன் டைட்டில் தி கோட் என மாறி இருக்கிறது.

 

அது மட்டுமல்ல படத்தில் அஜித் ரெபரன்ஸ் இருப்பதையும் வெங்கட் பிரபு உறுதி செய்திருக்கிறார். அது போஸ்டராக இருக்கலாம் அல்லது ஒரு போன் காலாக இருக்கலாம் அல்லது ஒரு காட்சியாக இருக்கலாம் என்று அவர் பேசியுள்ளார். இதே போல் கிளைமாக்ஸ் காட்சியில் சிஎஸ்கே வீரர்கள் வருவதையும் படத்தில் நடித்திருக்கும் அரவிந்த் ஆகாஷ் கூறியிருக்கிறார்.

 

இதேபோல் வேறு ஒரு பேட்டியில் பேசி இருக்கும் பிரேம்ஜி அமரன், இந்த திரைப்படத்தில் தான் சினேகாவிற்கு தம்பியாக நடித்திருப்பதாகவும், மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய் தன்னை மாமா என்று அழைப்பார் யாவும் கூறி இருக்கிறார். இந்தப் பேட்டி எல்லாம் பார்த்து விஜய் ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும், இதற்கு மேல் படத்தில் என்ன சஸ்பென்ஸ் இருக்கப் போகிறது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

 

- Advertisement -

சற்று முன்