- Advertisement -
Homeபொழுதுபோக்கு2025ஆம் ஆண்டின் முதல் பாதி முடிய போகுது... இந்த ஆறு மாதங்களில் திரையரங்குகளில் லாபம் ஈட்டிய...

2025ஆம் ஆண்டின் முதல் பாதி முடிய போகுது… இந்த ஆறு மாதங்களில் திரையரங்குகளில் லாபம் ஈட்டிய தமிழ் திரைப்படங்கள் இவ்வளவுதானா…

- Advertisement -

2025 ஆம் ஆண்டு தொடங்கியது முதலில் ஏராளமான தமிழ் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. ஆனால் இதில் பல திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூற வேண்டும். ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு விடாமுயற்சி திரைப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் பல்வேறு பிரச்சனைகளால் கடைசி நேரத்தில் அதன் ரிலீஸ் தேதி தள்ளிப் போக, யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் விஷாலின் மதகஜராஜா திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

12 ஆண்டுகளாக பெட்டிக்குள் முடங்கி இருந்த இந்த திரைப்படம், திடீரென திரையரங்குகளை எட்டிப் பார்க்க பலரும் அங்கு குவிந்தனர். குறிப்பாக சந்தானத்தின் காமெடியை ரசிக்க ஒரு பெரும் கூட்டம் திரண்டதால், மதகஜராஜா திரையரங்கு விநியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்தது. மிகக்குறைந்த பட்ஜெட்டில் வெளியான இந்த திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.

- Advertisement -

இதன்பிறகு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று தோல்வியடைந்தது. அதேசமயம் ஜனவரி மாதத்தின் இறுதியில் குடும்பஸ்தன் திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை வாரி குவித்தது. மிடில் கிளாஸ் குடும்ப இளைஞரின் வேதனையை நகைச்சுவை கலந்து கூறியதால் இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரிப்பீட்டட் ஆடியன்ஸ்களை வரவைத்தது பிரதீப் ரங்க நாதனின் டிராகன் திரைப்படம். அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்டது. நல்ல ஒரு கமர்சியல் திரைப்படமாக இது அமைந்ததால், திரையரங்குகளுக்கு ரசிகர்கள் குவிய, 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது டிராகன்.

- Advertisement -

இந்த வெற்றிப்பட வரிசையில் நாம் அடுத்து பார்க்கப் போவது டூரிஸ்ட் பேமிலி திரைப்படம். கடந்த மே மாதம் வெளியான இந்த திரைப்படம், பாசிட்டிவ் வைப்ஸ்களை பறக்க விட்டதால் திரையரங்குகளுக்கு கூட்டம் படையெடுக்க ஆரம்பித்தது. இதேபோல் சூரி நடிப்பில் வெளிவந்த மாமன் திரைப்படமும் பி மற்றும் சி சென்டர்களில் வெற்றி பெற்றது.

அதேசமயம் 2025 ஆம் ஆண்டு பிறந்த இந்த ஆறு மாதங்களில் அதிக வசூலை குவித்ததில் டாப் இடத்தில் இருப்பது அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம்தான். இது கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் எந்த குறையும் வைக்கவில்லை என்றே திரையரங்கு உரிமையாளர்கள் கூறுகிறார்கள். கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய் இந்த திரைப்படம் வசூல் செய்திருக்கிறதாம். இதுபோக வீர தீர சூரன், டி என் ஏ மற்றும் மர்மர் திரைப்படங்களும் ஓரளவு கணிசமான லாபத்தை கொடுத்திருப்பதாக திரையரங்கு விநியோகஸ்தர்கள் கூறுவதை கேட்க முடிகிறது.

- Advertisement -

சற்று முன்