- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயங்கள் எதுவுமே நடக்கலையே? உலகளவில் எதிர்பார்த்த வெற்றி குட் பேட் அக்லி படத்துக்கு கிடைக்குமா?...

அந்த விஷயங்கள் எதுவுமே நடக்கலையே? உலகளவில் எதிர்பார்த்த வெற்றி குட் பேட் அக்லி படத்துக்கு கிடைக்குமா? – குழப்பத்தில் தவிக்கும் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

இன்றைய உலகத்தை கலியுகம் என்று சொல்கின்றனர். அதே நேரத்தில் டிஜிட்டல் யுகம் ஆண்ட்ராய்டு யுகம் செல்போன் யுகம் என்று சொல்லும் அளவுக்கு நிலமை மாறியிருக்கிறது. அதே போல் இன்றைய காலகட்டத்தை விளம்பர யுகம் என்று சொன்னாலும் அது யாரும் மறுக்க முடியாத உண்மையாக தான் இருக்கிறது. எங்கு சென்றாலும் எது நடந்தாலும் அது விளம்பரம் சார்ந்ததாக இருக்கிறது.

அதுவும் பல நூறு ரூபாய் கோடிகளை முதலீடு செய்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு விளம்பரம் எனப்படும் பிரமோசன் நிகழ்ச்சி மிகவும் அவசியமாகிறது. நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் சியான் விக்ரம் சூர்யா தனுஷ் போன்றவர்கள் எல்லாம் தங்களது படங்களுக்கு பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.

- Advertisement -

குறிப்பாக ரஜினி 73 வயதிலும் தனது படத்தின் பிரமோசனில் பங்கேற்று பேசி படம் குறித்த வைப்பை தனது ரசிகர்களிடம் கொண்டு செல்கிறார். இந்தியன் 2 படத்துக்காக சென்னை ஐதராபாத் மும்பை போன்ற முக்கிய நகரங்களுக்கு இயக்குனர் ஷங்கருடன் 70 வயதான நடிகர் கமலும் போய் கலந்துக்கொண்டார்.

நடிகர் விஜயும் தொடர்ந்து தனது படங்களுக்கான பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். நடிகர்கள் சூர்யா விக்ரம் தனுஷ் என முன்னணி நடிகர்கள் நடிகைகள் பலரும் தங்களது படங்கள் வெளியாகும் போது அந்த படத்தின் டீசர் டிரெய்லர் இசை வெளியீட்டு விழாக்களில் பங்கேற்று அந்த படத்துக்கான விளம்பரத்தை செய்து ரசிகர்கள் மத்தியில் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றனர்.

- Advertisement -

ஆனால் நடிகர் அஜீத்குமார் கடந்த பல ஆண்டுகளாக அவர் நடிக்கும் படங்களின் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது இல்லை. படத்தில் நடிக்க கமிட் ஆகும்போதே ஷூட்டிங்குக்கு வருவது மட்டுமே தனது பணி. பிரமோசன் என எங்கும் என்னை அழைக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் ஒப்பந்தம் செய்யப்படுவதாக தெரிகிறது. அதனால் அவர் நடித்த படங்களின் பிரமோசன் என்பதே இல்லாமல் போய்விட்டது.

இப்போது வருகிற 10ம் தேதி குட் பேட் அக்லி படம் ரிலீஸாகிறது. உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்துக்கு இதுவரை எந்த பிரமோசன் நிகழ்ச்சியும் இல்லை. பத்திரிகையாளர் சந்திப்பு டீசர் வெளியீடு, டிரெய்லர் வெளியீடு இசை வெளியீடு என எதுவும் நடக்கவில்லை. தெலுங்கு இந்தியிலும் இந்த படம் ரிலீஸாகிறது. இப்படி ஒரு அவல நிலை இருந்தால், உலகம் முழுவதும் குட் பேட் அக்லி வசூலை குவிக்குமா என்ற சந்தேகம் ஏகே ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்