- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் படப்பிடிப்பில் பங்கேற்கும் தேவர் மகன், விருமாண்டி பட நட்சத்திரங்கள்... ஒருவேளை இது அந்தப்...

தக் லைப் படப்பிடிப்பில் பங்கேற்கும் தேவர் மகன், விருமாண்டி பட நட்சத்திரங்கள்… ஒருவேளை இது அந்தப் படத்தில் இரண்டாம் பாகமாகத் தான் இருக்குமோ?…

- Advertisement -

இயக்குனர் மணிரத்னத்திற்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் மிக முக்கியமான திரைப்படம் எதுவென்றால் அது நிச்சயம் நாயகனாகத்தான் இருக்கும். 1987 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், திரையரங்குகளில் 200 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்தது. தூத்துக்குடியில் இருந்து செல்லும் ஒரு சிறுவன் எப்படி மும்பையில் தாதாவாகிறான் என்பதை படத்தின் ஒன் லைன் ஸ்டோரி.

இதனை தனது தேர்ந்த திரைக்கதையாலும், கமல்ஹாசனின் அற்புதமான நடிப்பாலும் வெற்றி திரைப்படமாக மாற்றினார் மணிரத்னம். படத்திற்கு பக்கபலமாக இருந்தது, இசைஞானி இளையராஜாவின் இசை. படத்தில் எந்த ஒரு குறையும் சொல்ல முடியாத அளவுக்கு, திறம்பட எடுத்திருந்ததால் இன்று வரை ரசிகர்களால் நாயகன் கொண்டாடப்படுகிறது.

- Advertisement -

இந்த திரைப்படத்திற்காக கமல்ஹாசன் தேசிய விருதையும் பெற்றார். ஆனால் நாயகன் திரைப்படத்திற்கு பிறகு மணிரத்னம் கமல்ஹாசன் இருவரும் எந்த ஒரு திரைப்படத்திலும் இணையவே இல்லை. இருவர் கூட்டணி குறித்தும் அவ்வப்போது தகவல் வெளியாகி இருந்தாலும், அது உறுதியான அறிவிப்பாக இல்லாமல் அப்படியே தேங்கி இருந்தது.

இப்படியான சூழலில் தான், 36 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னத்துடன் கமல்ஹாசன் இணைவதாக அறிவிக்கப்பட்டது. இந்தத் திரைப்படத்தை மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசையமைக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் கூட்டணி இணைந்து இருப்பதால், அறிவிப்பு வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறச் செய்தது.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியானது. அதற்கு தக் லைப் என பெயரிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் நீண்ட முடியுடன் காட்சி அளித்த கமல்ஹாசன், திருநெல்வேலி வட்டார வழக்கில் டயலாக் பேசினார். இதில் அவரது பெயரை ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்று குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், சாதியை குறிப்பிட வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

அதேசமயம் வீடியோவில் இடம் பெற்ற சண்டைக் காட்சிகள், பலரையும் கவர்ந்தன. இப்படியான சூழலில் வரும் 18ஆம் தேதி தக் லைப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் உள்ள கல்லூரியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாம். இதில் நாசர் மற்றும் நடிகை அபிராமி கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவருமே கமலின் முந்தைய திரைப்படங்களில் நடித்தவர்கள். அது மட்டுமல்லாமல் நாயகன் திரைப்படத்தில், நாசரும் வந்திருப்பார். இதனால் ஒருவேளை இந்த திரைப்படம் நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று பலர் கூறி வருகின்றனர். தக் லைப் படத்தில் திரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்