- Advertisement -
Homeபொழுதுபோக்கு3 வருஷமா ஒரே டிரஸ்சை போட்டுட்டு அந்த படத்துல நடிச்சேன்… ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு -...

3 வருஷமா ஒரே டிரஸ்சை போட்டுட்டு அந்த படத்துல நடிச்சேன்… ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு – இயக்குனர் பாலா பட நடிகை சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

நடிகர் சியான் விக்ரம் நடித்த படங்களில் அவருக்கு முக்கிய திருப்புமுனையை தந்த படம் சேது. கடந்த 1999ம் ஆண்டுகளில் வெளியான இந்த படத்தை இயக்கி தனது சினிமா பயணத்தை துவங்கினார் இயக்குனர் பாலா. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் நடிகர் மற்றும் இயக்குனர் சசிக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் பாலா சேது படத்துக்கு பிறகு நந்தா நான் கடவுள் பிதாமகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை உள்ளிட்ட படங்களை பாலா இயக்கினார். கடைசியாக பாலா இயக்கத்தில் வெளியான படம் நடிகர் அருண் விஜய் நடித்த வணங்கான் என்பது குறிப்பிடத்தக்கது. தனது எந்த படமாக இருந்தாலும் அதில் இயல்பு தன்மை மாறாமல் இருக்க வேண்டும் என்பதில் அதிகளவில் மெனக்கெடுபவர் இயக்குனர் பாலா.

- Advertisement -

அதனால்தான் அவரது படங்களில் நடிப்பவர்கள் பலவிதமான சோதனைகளை கடந்து நடிக்க வேண்டியுள்ளது. கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்ளும் கலைஞர்களால் மட்டுமே இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிக்க முடியும். அதனால் ஒரு படத்தில் பாலா இயக்கத்தில் நடித்தவர்கள், அடுத்து அவரது இயக்கத்தில் நடிக்க சற்று யோசித்துதான் முடிவு செய்வார்கள்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் முதல் படமாக உருவான சேது படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடித்தவர் நடிகை ராஜஸ்ரீ. அந்த படத்தில் அவரது நடிப்பு நல்ல கவனம் பெற்றது. இந்நிலையில் சேது படம் குறித்து சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகை ராஜஸ்ரீ கூறியதாவது, சேது படத்தில் நடித்த போது 3 வருஷமாக எனக்கு ஒரே ஒரு டிரஸ்தான். 3 வருஷம் அதே துணிதான். அந்த துணியை துவைக்க கூடாதுன்னு பாலா சார் சொல்லிட்டார்.

- Advertisement -

எப்படா இந்த ஷாட் முடியும்? இந்த துணியை கழட்டீட்டு வேற டிரஸ்சை போடலாமுன்னு மனசுக்குள்ள இருக்கும். மியூசியம்ல கூட வைக்கலாம். அந்த மாதிரி ஒரு டிரஸ்தான் அது. ஒரு காட்சியில் விக்ரம் சார் காலை பிடிச்சுக்கிட்டு நான் மண்ணுல புரண்டு அழுவேன். அந்த ஷாட் எடுத்து முடிச்ச பிறகும் சட்டையை துவைக்க கூடாதுன்னு பாலா சார் சொல்லிட்டார்.

அந்த அளவுக்கு அந்த கேரக்டர் ரொம்பவும் இயல்பா இருக்க வேண்டும் என்று டைரக்டர் நினைச்சார். நான் போட்டிருந்த அந்த அழுக்கு சட்டையை மட்டும் எப்பவுமே அவரோட பேக்குல வெச்சுக்கிட்டு தான் அவர் சுத்திக்கிட்டு இருப்பார் என்று நடிகை ராஜஸ்ரீ சேது படத்தில் நடித்த அனுபவங்களை அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்