- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 நாட்களில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் நிலவரம், கார் ரேஸை விட...

4 நாட்களில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் நிலவரம், கார் ரேஸை விட இதுல ஓவர் ஸ்பீடு காட்றாரே அஜீத்குமார்? – கொண்டாட்டத்தில் ஏகே ரசிகர்கள்!

- Advertisement -

ரஜினிகாந்த் கமல்ஹாசன் விஜய் வரிசையில் டாப் ஸ்டார் நடிகராக இருப்பவர் அஜீத்குமார். இன்றைய தமிழ் சினிமாவில் இந்த 4 நட்சத்திரங்களும்தான் தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு நஷ்டம் இல்லாத கணிசமான லாபம் தரக்கூடிய முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். உலக அளவில் பலத்த ரசிகர்கள் கூட்டமும் இவர்களுக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி வெளியான விடாமுயற்சி படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனால் இந்த படத்தை தயாரித்த லைகா புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 200 கோடி வரை பலத்த நஷ்டம் ஏற்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பின் வெளியான விடாமுயற்சி படுதோல்வி அடைந்தது ஏகே ரசிகர்களை விரக்தியடைய வைத்தது.

இந்நிலையில் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் கடந்த 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகி சக்கைப் போடு போட்டு வருகிறது. முதல் நாளில் 30.9 கோடி ரூபாய் வசூலித்த இந்த படம் 2வது நாளில் ரூ. 90 கோடி வசூலை கடந்தது. 3வது நாளில் வசூல் நிலவரம் ரூ. 120 கோடியை கடந்துவிட்டதாக கூறப்பட்டது. இது ஏகே ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

குட் பேட் அக்லி படத்தை பொருத்த வரை கதை திரைக்கதை லாஜிக் இல்லாமல் இருந்தாலும் அஜீத் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமான ஒரு அம்சத்தில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. காட்சிக்கு காட்சி அஜீத்குமாரை புகழும் ஒரு படமாக இது வெளியாகி உள்ளது. பில்லா வரலாறு தீனா வாலி அமர்க்களம் உள்ளிட்ட அஜீத் படங்களில் ரெபரென்ஸ் ஆகவே இந்த படம் உள்ளது.

அதனால் அஜீத்குமார் ரசிகர்களை பொருத்த வரை அவர்களுக்கு இது செம விருந்துதான். படம் பார்த்த ஏகே ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இந்த படத்தை காணவும் கொண்டாடவும் செய்கின்றனர். மேலும் ஒத்த ரூபா தாரேன் பாடலும் இளமை இதோ இதோ பாடலும் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா பாடலும் படத்துக்கு பெரிய வைப்பை தந்திருக்கிறது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி துவங்கி 13ம் தேதி வரை நான்கே நாட்களில் குட் பேட் அக்லி படத்தின் வசூல் உலகளவில் ரூ. 150 கோடியை கடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜீத்குமார் பங்கேற்கும் கார் ரேஸில் அவர் காட்டும் வேகத்தை விட இந்த படத்தின் வசூலில் ஓவர் ஸ்பீடு காட்டி வருகிறார் என்று ஏகே ரசிகர்கள் உற்சாகமாக கூறி வருகின்றனர். இன்னும் சில தினங்களில் குட்பேட் அக்லி படம் ரூ. 200 கோடி வசூலை எட்டும் என்றும் கூறப்படுகிறது.

சற்று முன்