- Advertisement -
Homeபொழுதுபோக்குரமலானை முன்னிட்டு குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து வெளியான சூப்பர் அறிவிப்பு... என்ன அஜித் ரசிகர்களே...

ரமலானை முன்னிட்டு குட் பேட் அக்லி திரைப்படத்திலிருந்து வெளியான சூப்பர் அறிவிப்பு… என்ன அஜித் ரசிகர்களே ரெடியா…

- Advertisement -

அஜித் குமார் நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கிறது குட் பேட் அக்லி திரைப்படம். மார்க் ஆண்டனி திரைப்படத்தின் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்த திரைப்படத்தை எடுத்திருக்கிறார். தான் செல்லும் நிகழ்ச்சிகளில் எல்லாம் தன்னை அஜித் ரசிகர் என்று கூறி பெருமை கொள்ளும் ஆதிக், இந்த திரைப்படத்தில் அதற்கான செய்கைகளில் சிறப்பாக ஈடுபட்டிருக்கிறார்.

குட் பேட் அக்லி திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தெலுங்கு மற்றும் கன்னட சினிமாவில் மிகப்பெரிய நிறுவனமான இது, அண்மையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தையும் தயாரித்து இருந்தது. இப்படியான சூழலில் தான் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மூலம், முதல்முறையாக இந்த நிறுவனம் தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறது.

ஜிவி பிரகாஷ் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து இதிலும் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. இதுபோக தெலுங்கு நடிகர் சுனில், பிரசன்னா யோகி பாபு அர்ஜுன் தாஸ் பிரபு உள்ளிட்டோரும் இடம் பெற்றுள்ளார்கள்.

அண்மையில் இந்த திரைப்படத்திலிருந்து வெளியான டீசர் பட்டையை கிளப்பியது. அதில் முழுக்க முழுக்க அஜித்தை மையமாக வைத்தே காட்சிகளை காட்டி இருந்தார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். அதுவும் விண்டேஜ் அஜித்தை அதில் பார்க்க முடிந்ததாக சிலாகித்தார்கள் ஏகே ரசிகர்கள். குறிப்பாக தீனா அமர்க்களம் பில்லா வாலி திரைப்படங்களின் அஜித்தின் மேனரிசங்களை அந்த டீசரில் பார்க்க முடிந்தது.

குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து பேசி இருந்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், இது முழுக்க முழுக்க ஆக்சன் திரைப்படமாக எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். அதேசமயம் தந்தைக்கு மகனுக்குமான பாசத்தையும் இந்த திரைப்படம் விளக்கும் என்று அவர் கூறியிருந்தார். அஜித்தின் மகனாக இந்த திரைப்படத்தில் கார்த்திகேயா தேவ் நடித்திருக்கிறார்.

இவர் ஏற்கனவே, பிரபாஸ் நடித்த சலார் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்தார். வரும் பத்தாம் தேதி குட் பேட் அக்லி வெளியாகும் நிலையில், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, படத்தின் டிக்கெட்டிற்கான முன்பதிவு குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. இதைக் கேள்விப்பட்ட அஜித் ரசிகர்கள், படத்தை முன்பதிவு செய்ய ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

சற்று முன்