- Advertisement -
Homeபொழுதுபோக்குபுஷ்பா 2 திரைப்படத்திற்கு செய்தது போலவே குட் பேட் அக்லிக்கும் செய்யப் போகும் தயாரிப்பு நிறுவனம்......

புஷ்பா 2 திரைப்படத்திற்கு செய்தது போலவே குட் பேட் அக்லிக்கும் செய்யப் போகும் தயாரிப்பு நிறுவனம்… அடேங்கப்பா இது செம ஸ்கெட்ச்சா இருக்கே…

- Advertisement -

அஜித் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இதில் குட் பேட் அக்லி திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அஜித் குமாரின் தீவிர ரசிகரான இவர், இதற்கு முன்னதாக மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியிருந்தார். பெரும் சிக்கலான கதையை கையில் எடுத்து அதை திரைக்கதையின் மூலம் மிகவும் சுலபமாக சொல்லி மார்க் ஆண்டனியின் பாராட்டைப் பெற்றார் ஆதிக். இந்தத் திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது.

இப்படியான சூழலில் தான் அஜித் குமாருடன் இணைந்து ஆதிக் பணியாற்றி இருக்கிறார். இந்தப் படத்தில் பிரசன்னா அர்ஜுன் தாஸ் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். அஜித்திற்கு ஜோடியாக திரிஷா வருகிறார். இது திரைப்படத்தின் போஸ்டர்களே படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற வைத்தது.

குறிப்பாக கலர் கலர் கண்ணாடி உடம்பு முழுவதும் டேட்டு மாடலான சட்டை என அஜித்தின் தோற்றமே பலரும் திரும்பி பார்க்கும் வகையில் இருந்தது. நீங்கள் இதுவரை பார்த்திராத அஜித்குமாரை குட் பேட் அக்லியில் பார்க்கலாம் என்று சினிமா விமர்சகர்களும் கூறினார்கள். அதுபோக இந்த திரைப்படத்தின் ஒரு போஸ்டரில் அஜித்தின் கண்ணாடியில், பில்லா படத்தின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும்.

இது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆதிக் ரவிச்சந்திரன் என்னதான் சொல்லப் போகிறார் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதன் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் தான் இசையமைத்திருக்கிறார். அதே சமயம் அவர் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட மோதலால் விலகி இருப்பதன் காரணமாக பின்னணி இசையில் பணியாற்றி இருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நிறுவனமான மைத்திரி மூவிஸ் இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. படம் ஏப்ரல் பத்தாம் தேதி தான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில், ஒன்பதாம் தேதி இரவே பிரீமியர் ஷோவை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்கு முன்னதாக, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்த இந்த நிறுவனம் அதற்கும் இதையேதான் செய்தது. இந்த தகவல் கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

சற்று முன்