- Advertisement -
Homeபொழுதுபோக்குகுட் பேட் அக்லி ரிலீஸ் தேதியை ஆதிக் ரவிச்சந்திரன் உடனடியாக அறிவிக்க இப்படி ஒரு காரணமா?...

குட் பேட் அக்லி ரிலீஸ் தேதியை ஆதிக் ரவிச்சந்திரன் உடனடியாக அறிவிக்க இப்படி ஒரு காரணமா? – கடைசியில் அஜீத்துக்கே அவரே வில்லனாக மாறிட்டாரா?

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரடக்சன்ஸ் தயாரித்த இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடித்துள்ளார். அர்ஜூன் ஆரவ் ரெஜினா கசாண்ட்ரா உள்ளிட்டோர் நடித்த இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துளளார்.

துணிவு படத்துக்கு பின் அஜீத்குமார் நடித்த படம் 2 ஆண்டுகளாக வராத நிலையில், விடாமுயற்சி படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என, டிசம்பர் மாதம் விடாமுயற்சி படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்தது. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த உற்சாகமடைந்தனர். நீண்ட இழுபறிக்கு பின் இந்த படம் ரிலீஸ் என்ற அறிவிப்பே ஏகே ரசிகர்களுக்கு தெம்பூட்டியது.

- Advertisement -

ஆனால் டிசம்பர் மாதம் 31ம் தேதி இரவு, விடாமுயற்சி படம் பொங்கல் ரிலீஸ் இல்லை. சில காரணங்களால் விடாமுயற்சி படம் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக, லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அஜீத்குமார் ரசிகர்கள் பலத்த விரக்தியில் தள்ளப்பட்டனர். ஒரு ஸ்டார் நடிகர் படத்துக்கே இப்படி ஒரு நிலையா என்றும் மன உளைச்சலடைந்தனர்.

இந்த படம் ஜனவரி 23ம் தேதி வெளிவர வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் பரவினாலும், அது இன்னும் உறுதிப்படுத்தபடவில்லை. அதே நேரத்தில் பிப்ரவரி மார்ச் ஏப்ரல் என இன்னும் சில மாதங்கள் தள்ளிப் போகவும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. அதாவது பிரேக் டவுன் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலான இந்த படத்தை முறையான அனுமதி பெற்று இயக்காததால் அந்த படத்தை தயாரித்த நிறுவனம், ரூ. 30 கோடி வரை இழப்பீடு கேட்டுள்ளது.

- Advertisement -

இந்த சூழலில்தான், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் குட்பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பை அதிரடியாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏனெனில் ஏற்கனவே அந்த தேதியில் தனுஷ் நடித்து இயக்கிய இட்லிகடை படம் ரிலீஸாக உள்ளது. விடாமுயற்சி படம் ஜனவரி பிப்ரவரி அல்லது மார்ச் ஏப்ரல் என ரிலீஸ் தேதி தள்ளிப் போக அதிக வாய்ப்புகள் உள்ளன.

இந்த நிலையில் குட்பேட் அக்லி படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிக்காவிட்டால், அவர்கள் ஏப்ரல் 10ம் தேதி என அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. அப்படி அறிவித்துவிட்டால் ஒரு மாதம் கூட ஆகாமல் மே 1ம் தேதி படத்தை வெளியிட்டால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பும் வரவேற்பும் இருக்காது. அஜீத் படத்துக்கு அஜீத் படமே வில்லனாக மாறி விடும். எனவே, விடாமுயற்சி படம் ரிலீஸ் குழப்பம் நீடிப்பதால்தான் இப்படி குட்பேட் அக்லி ரிலீஸ் தேதியை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் முன்பே முன்னெச்சரிக்கையாக அறிவித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்