நடிகர் ஜெயம் ரவி, தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கிய ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் கதாநாயகியாக சதா நடித்திருந்தார். அவரும் அறிமுக நாயகிதான். முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை ஜெயம் ரவி பெற்றார். இந்த படத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள் மத்தியில் பெரிய ஆதரவு கிடைத்தது.
தொடர்ந்து எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தனி ஒருவன், போகன், வனமகன், அடங்க மறு, டிக் டிக் டிக், பூமி, பூலோகம், நிமிர்ந்து நில் உள்ளிட்ட பல படங்களில் ஜெயம் ரவி நடித்தார். இதில் சில படங்கள் ஜெயம் ரவிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படங்களாக அமைந்தன.
ஒரு கட்டத்துக்கு பிறகு ஜெயம் ரவி நடித்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதுவும் கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த அகிலன், இறைவி, சைரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தன. இதற்கிடையே மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவி நடிப்பு பலராலும் பாராட்டைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ஜெயம் ரவி நடித்த படங்களில், அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தையும் வெற்றியையும் கொடுத்த படம் தனி ஒருவன். ஜெயம் ரவியின் அண்ணன் மோகன் ராஜா இயக்கிய இந்த படம் மிகப்பெரிய அளவில் ஜெயம் ரவிக்கு வெற்றியை கொடுத்த படமாக இருந்தது. அரவிந்த் சாமி வில்லன் கேரக்டரில் அசத்தியிருந்தார். ஜெயம் ரவியின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படமாக தனி ஒருவன் அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அப்போதே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அந்த படம் குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. தொடர்ந்து தனி ஒருவன் 2 படத்துக்கான கால்ஷீட் கேட்டு அவர் அண்ணன் மோகன் ராஜா ஜெயம் ரவியிடம் வலியுறுத்தியும், அவர் மற்ற படங்களில் தொடர்ந்து நடித்தாரே தவிர தனது அண்ணன் மோகன் ராஜாவுக்கு கால்ஷீட் தரவே இல்லை.
இந்த சூழலில் தனிஒருவன் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம், டைரக்டர் மோகன்ராஜா நடிகர் ஜெயம் ரவி இருவரையும் அழைத்து இந்த ஆண்டு இறுதிக்குள் தனி ஒருவன் 2 படத்தை கண்டிப்பாக நீங்கள் இருவரும் தந்தே ஆக வேண்டும். இனிமேல் வேறு கதைகளை சொல்லி நழுவி விட முடியாது. இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு, என்று கண்டிசஷனாக ஆர்டர் போட்டு விட்டனர். இதையடுத்து தனி ஒருவன் 2 படத்தின் ப்ரீ ப்ரொடக்சன் பணிகளை டைரக்டர் மோகன் ராஜா துவங்கி இருக்கிறார்.





