துணிவு படத்தை தொடர்ந்து நடிகர் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் விடாமுயற்சி. சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி இருப்பதாகவும், ஸ்பெயின் நாட்டில் இப்போது குட்பேட் அக்லி படப்பிடிப்பில் உள்ள திரிஷா, அஜீத்குமார் மிக விரைவில் அந்த பாடல் காட்சி படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து வருகிறது. சென்னை, ஐதராபாத் நகரங்களில் படப்பிடிப்பை முடித்த குட் பேட் அக்லி படக்குழு இப்போது ஸ்பெயின் நாட்டில் முகாமிட்டுள்ளது. அங்கு 60 நாட்களுக்கு இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.
இப்போது அங்குதான் அஜீத்குமார், திரிஷா உள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முக்கிய பாடல் காட்சிகள், சண்டை காட்சிகள் மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்படுகின்றன. இந்த படத்தில் நடிகர்கள் சுமன், பிரசன்னா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
குட் பேட் அக்லி படம், வருகிற பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று ஆரம்பத்தில் இருந்தே சொல்லப்பட்டு வந்தது. மேலும் விடாமுயற்சி படம், ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது. அதனால், விடாமுயற்சிக்கு படப்பிடிப்பு துவங்கிய குட் பேட் அக்லி முதலாவதாகவும், அதன் பிறகு 2வதாக விடாமுயற்சி படம் ரிலீஸாகும் என்றும் ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவியது.
ஆனால் தற்போது புதிய தகவலாக, வருகிற 2025ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதி, பொங்கலுக்கு குட்பேட் அக்லி படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இன்னும் இந்த படத்துக்கான சாட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் விற்பனையாகவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன், அஜீத்குமார் கூட்டணி என்பதால், எந்தளவுக்கு படத்துக்கு விலை தருவது என்ற குழப்பத்தில் ஓடிடி தளங்களும், சாட்டிலைட் சேனல்களும் பெரிய விலை கொடுக்க முன்வராமல் தயங்குகின்றன.
அதனால் குட் பேட் அக்லி படத்துக்கு சாட்டிலைட், டிஜிட்டஸ் ரைட்ஸ் கிடைப்பதில் தாமதம் நீடிப்பதால், நிச்சயமாக வருகிற பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸாகாது. அதே நேரத்தில் விடாமுயற்சி தயாராக இருப்பதால் அது வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் ஆகி விடும். அதன்பிறகு ஏப்ரல் 14ம் தேதி, தமிழ் புத்தாண்டில் குட்பேட் அக்லி ரிலீஸ் செய்யப்பட வாய்பபுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அஜீத் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தந்தாலும், விடாமுயற்சி முதலில் வருவது மகிழ்ச்சியை தந்துள்ளது.





