- Advertisement -
Homeபொழுதுபோக்குகார் விபத்தில் சிக்கிய ஜி பி முத்து... அய்யய்யோ நம்ம தலைவருக்கு என்ன ஆச்சுங்க...

கார் விபத்தில் சிக்கிய ஜி பி முத்து… அய்யய்யோ நம்ம தலைவருக்கு என்ன ஆச்சுங்க…

- Advertisement -

நவீன யுகத்தில் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ள சூழலில், அதன் மூலம் பலரும் தங்களுக்கு விருப்பமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் குறுகிய காலத்தில் சிலர் பிரபலமாவதற்கும் இணையதள பயன்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. யூடியூப் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் என பல்வேறு சமூக வலைத்தளங்களும் அவர்களுக்கு நுழைவு வாயிலாக இருப்பதால் அதில் வீடியோ வெளியிட்டு சம்பாதித்து வருகின்றனர்.

இப்படி சமூக வலைதளத்தின் மூலம் தனது செல்வாக்கை பெருக்கி கொண்டவர் தான் ஜி பி முத்து. ஆரம்பத்தில் டிக் டாக் செயலி மூலம் அறிமுகமான அவர், தனக்கே உரித்தான நெல்லை தமிழில் பேசி பலரையும் கவனிக்க வைத்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த அவர் மரத் தொழில் செய்து வந்தார். அப்போது கிடைக்கும் நேரத்தில் எல்லாம் டிக் டாக்கில் வீடியோ பதிவிட அதற்கு நன்றாக வரவேற்பு கிடைத்தது.

- Advertisement -

செத்த பயலே என அவர் கூறுவதும், நையாண்டி தனத்துடன் அவர் பேசுவதும் பலருக்கு பிடித்திருந்தால் ஜி பி முத்துவை ஏராளமானோர் பின் தொடர ஆரம்பித்தனர். இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட அவர், தான் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிலும் நெல்லைத் தமிழை நக்கலாக பேசி ரசிக்க வைத்தார். பிறகு டிக் டாக் செயலி தடை செய்யப்பட்டாலும், யூடியூப் இன்ஸ்டாகிராமை சரியாக பயன்படுத்தி தனது செல்வாக்கை உயர்த்திக்கொண்டார்.

மேலும் youtube இணையதளத்தில் தனக்கு கடிதம் வந்திருப்பதாக கூறி அதை வாசித்துக் காட்டியும் அவர் கலகல பூட்டினார்.. ஆனால் அதில் அதிகம் இரட்டை அர்த்த வார்த்தைகள் இருப்பதாகவும் பலர் கண்டித்தனர். இப்படியான சூழலில், திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார் ஜி பி முத்து. அவருக்கு சிறுசிறு படங்களில் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

- Advertisement -

பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஒரே வாரத்தில் அதிலிருந்து திரும்பினார். இது தொடர்ந்து விஜய் டிவியில் குக் வித் கோமாளியில் அவர் கலந்து கொண்டார். இந்த நிலையில் தான் ஜிபி முத்துவின் கார் விபத்தில் சிக்கி உள்ளது. மதுரையில் இருந்து அவர் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த போது மேம்பாலத்தின் காரை நிறுத்திருக்கிறார். அப்போது பின்னால் வந்த வாகனம் அவர் வாகனத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், ஆனால் அவர் கார் தான் சேதம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இருவரும் சமாதானம் ஆகிவிட்ட நிலையில் அங்கு கூடியிருந்த சிலரால் பிரச்சனை ஏற்பட்டதாகவும், சிலர் வம்புடன் பேசியதாகவும் ஜி பி முத்து கவலையுடன் கூடியிருக்கிறார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஜி பி முத்துவுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்

- Advertisement -

சற்று முன்