- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி 68 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை... அவரே கூறியதால் உடைந்தது சஸ்பென்ஸ்... அதுக்குள்ளேயும் என்னங்க...

தளபதி 68 திரைப்படத்தில் இணைந்த பிரபல நடிகை… அவரே கூறியதால் உடைந்தது சஸ்பென்ஸ்… அதுக்குள்ளேயும் என்னங்க அவசரம்…

- Advertisement -

வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக நடித்துள்ள திரைப்படம் லியோ. செவன் ஸ்டார் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். வரும் 19ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாக இருப்பதால், அடுத்தடுத்த அப்டேட்டுகளில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.

ஏற்கனவே, இசை வெளியீட்டு விழா நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு பின்பு ரத்தானது. இதனால் விஜய் ரசிகர்கள் சோகம் அடைய, அவர்களை கூல் செய்வதற்காக உடனடியாக லியோ படத்திலிருந்து இரண்டாம் பாடல் வெளியிடப்பட்டது. அதுவும் முணுமுணுக்கும் ரகத்தில் இருக்க, ரசிகர்கள் அடுத்ததாக ட்ரெய்லர் எப்போது என கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

அனேகமாக வரும் வார இறுதியில் ட்ரெய்லர் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய வெளிநாடுகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. லோகேஷ் கனகராஜின் முந்தைய திரைப்படமான விக்ரம் படத்தின் எல் சி யு கான்செப்ட் என்னும் தாக்கத்தால், அங்கு முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் லியோ திரைப்படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் மும்மரம் காட்டி வருகிறார் தளபதி விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதில் விஜய் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடிக்க இருக்கிறாராம்.

- Advertisement -

படத்தில் விஜய் புதிய தோற்றத்தில் காட்ட வேண்டும் என்பதற்காக சமீபத்தில் படக்குழு கலிபோர்னியா சென்று வந்தது. வரும் நான்காம் தேதி இதற்கான பட பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டு, சூட்டிங் தொடங்குகிறது. முதலில், பாடலைப் படமாக வெங்கட் பிரபு திட்டமிட்டு உள்ளாராம். ராஜூ சுந்தரம் தான் இதற்கு நடன இயக்குனராக செயல்படுகிறாராம்.

தளபதி 68-ல் பிரியங்கா மோகன், சினேகா, பிரபுதேவா, பிரசாந்த், ஜெய் ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இளம் நடிகை மீனாட்சி சவுத்ரியும் படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்ற இவர், பிரபாஸின் சலார் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகும் குண்டூர்காரம் படத்திலும் இவர் நடித்திருக்கிறார். தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படத்திலும் மீனாட்சி வந்து போனார். இந்த நிலையில் அவரை தளபதி 68 ல் நடிக்க வைக்க வெங்கட் பிரபு புக் செய்துள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நடிகை, எக்ஸ் வலை தளத்தில் வெங்கட் பிரபுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்