தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜீவி பிரகாஷ்குமார். வசந்தபாலன் இயக்கிய வெயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர் பல வெற்றிப் படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை தந்திருக்கிறார். பல படங்களில் அவரே சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். இப்போது தமிழ் சினிமாவில் நடிகராகவும் வலம் வருகிறார்.
வெயில் படத்தை தொடர்ந்து பொல்லாதவன் கிரீடம் அங்காடி தெரு ஆயிரத்தில் ஒருவன் இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் மதராச பட்டணம் ஆடுகளம் ஓரம்போ அசுரன் சகுனி குசேலன் என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்த ஜீவி பிரகாஷ்குமார் நடிப்பிலும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறார்.
குப்பத்து ராஜா நாச்சியார் டார்லிங் திரிஷா இல்லேன்னா நயன்தாரா ஜெயில் சிவப்பு மஞ்சள் பச்சை டார்லிங் பேச்சுலர் அடியே என பல படங்களில் நடித்துள்ளார். இப்போது செல்வராகவன் இயக்கத்தில் மென்டல் மனதில் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்துக்கு அவரே இசையமைத்து தயாரிக்கவும் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் தனது காதல் மனைவி சைந்தவியை பிரிவதாக ஜீவி பிரகாஷ்குமார் அறிவித்தார். இது சினிமா ரசிகர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் சமீபத்தில் நடந்த ஒரு இசை நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். ஆனால் இது அந்த நிகழ்ச்சிக்காக மட்டும்தான் என்று கூறப்படுகிறது.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் கூறியதாவது, நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையும், நாம் செய்யும் வேலையும் வேறு வேறு என்பதை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்முடைய வேலையை நாம் சிறப்பாக செய்ய முடியும். அப்படி நான் இருந்ததால்தான் என்னுடைய வேலையை நான் தொடர்ந்து செய்ய முடிகிறது.
நாம் செய்யும் தொழிலில் 100 சதவீத உழைப்பை நாம் கொடுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாம் அந்த வேலைக்கு தகுதி இல்லாதவர்களாக ஆகி விடுகிறோம். எனக்கும் தனிப்பட்ட முறையில் நிறைய மன அழுத்தம் இருக்கிறது. ஆனால் அது வேறு இது வேறு என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். தனது திருமண வாழ்க்கை முறிவு குறித்துதான் அவர் இப்படி மன அழுத்தம் இருப்பதாக கூறியிருப்பது தெளிவாகிறது.





