தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜீவி பிரகாஷ் குமார். இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி ரெஹைனாவின் மகன்தான் ஜீவி பிரகாஷ் குமார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது சொந்த தாய்மாமா தான் ஏஆர் ரகுமான். சிறு வயதிலேயே தனது மாமா ஏ ஆர் ரகுமான் இசையமைத்த பல பாடல்களில் தனது குரலை ஜீவி பிரகாஷ் குமார் பதிவு செய்திருக்கிறார்.
அதன் பிறகு இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் பரத் பசுபதி பாவனா ஜிஎம் குமார் உள்ளிட்டோர் நடித்த வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தனது 19வது வயதில் ஜீவி பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது முத்திரையை பதித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரவேற்பு பெற்றார். தொடர்ந்து தனது இசையில் பல சூப்பர் ஹிட் படங்களை அவர் கொடுத்தார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உள்ள ஜீவி பிரகாஷ் குமார் இதுவரைக்கும் 120க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் 500க்கும் அதிகமான பாடல்களை அவர் உருவாக்கிய நிலையில் சுமார் 100 பாடல்களை அவரே தனது சொந்த குரலில் பாடி இருக்கிறார்.
இதற்கிடையே சூரரைப் போற்று வாத்தி அமரன் உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் தேசிய விருதுகளை அவர் பெற்றிருக்கிறார். இசையமைப்பாளராக மட்டுமின்றி திரைப்பட நடிகராகவும் ஜீவி பிரகாஷ் குமார் தொடர்ந்து ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறார். டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜீவி பிரகாஷ் இதுவரைக்கும் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பில் உருவான இம்மார்ட்டல் என்ற திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய ஜீவி பிரகாஷ்குமார், தனது முக்கிய படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதுகுறித்து ஜீவி பிரகாஷ் குமார் கூறுகையில், ஆயிரத்தில் ஒருவன் மதராசபட்டிணம் அங்காடி தெரு வெயில் காக்கா முட்டை ஆடுகளம் பொல்லாதவன் விசாரணை மயக்கம் என்ன உள்ளிட்ட பல படங்களுக்கு நான் தேசிய விருது கிடைத்தும் என்று எதிர்பார்த்தேன்.
ஆனால் எதிர்பார்த்த சில படங்களுக்கு தேசிய விருது கிடைக்காத நிலையில் சூரரைப் போற்று வாத்தி அமரன் ஆகிய படங்களுக்கு எனக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. எனது இசை பயணத்தில் விருதுகளுக்கு அப்பாற்பட்டு ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் வரவேற்பும் ஆதரவும் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அதில் ஜீவி பிரகாஷ் குமார் கூறியிருக்கிறார்.





