- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யா படங்களை தொடர்ந்து மண்ணை கவ்விய கமல் படங்கள்… இந்த அரசியல் சூழ்ச்சியில் ஜனநாயகன்...

நடிகர் சூர்யா படங்களை தொடர்ந்து மண்ணை கவ்விய கமல் படங்கள்… இந்த அரசியல் சூழ்ச்சியில் ஜனநாயகன் படம் தப்புமா? – விஜய் ரசிகர்கள் அச்சம்!

- Advertisement -

ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை தந்தவர் சூர்யா. நடிகர் சிவக்குமாரின் மூத்த மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவுக்குள் வந்த சூர்யா, துவக்கத்தில் நடிக்க சற்று தடுமாறினார். பிறகு இயக்குனர்கள் அமீர் பாலா ஏஆர் முருகதாஸ் கௌதம் மேனன் போன்றவர்கள் அவரை ஒரு நல்ல நடிகராக ஹீரோவாக தமிழ் சினிமாவுக்கு மாற்றிக் கொடுத்தனர்.

அதன்பிறகு பல வெற்றிப் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதல் திருமணம் செய்தார். பிறகு சமூகம் அரசியல் கல்வி குறித்த சில விமர்சனங்களை தனது கருத்துகளாக சூர்யா பொதுவெளியில் முன்வைத்தார். அதில் இருந்தே நடிகர் சூர்யாவை அரசியல் களத்தில் கட்டம் கட்ட துவங்கி விட்டனர்.

தொடர்ந்து அவரது படங்கள் வெளியாகும் போதெல்லாம் எதிர்மறையான விமர்சனங்களும் கருத்துகளும் இணையத்தில் வைரலாகின. முதல் நாளில் முதல் காட்சி படம் பார்த்தவர்களும் சூர்யாவுக்கு எதிரான விமர்சனங்களை அதிகமாக முன்வைக்க துவங்கினர். அதனால் சிங்கம் 2 படத்துக்கு பிறகு ரெட்ரோ படம் வரை கடந்த 11 ஆண்டுகளாக மாஸ் ஹிட் படம் ஒன்றை கூட சூர்யா தர முடியவில்லை.

இப்போது அதே வட்டத்தில் நடிகர் கமல்ஹாசனும் சிக்கியிருக்கிறார். இந்தியன் 2 படத்தை இணையத்தில் கழுவி கழுவிய ஊற்றிய நெட்டிசன்கள், தக்லைஃப் படத்தின் சோலியை முடித்து விட்டனர். இந்த 2 படங்களுமே சுமாராக ஒருமுறை போனால் போகிறது என்று ஒருமுறை பார்க்கும் சினிமா ரசிகர்களை கூட, தக்லைஃப் படம் ரிலீஸ் ஆன தியேட்டர் பக்கமே போயிடாதீங்க என்று பயமுறுத்தி விட்டனர்.

ஏனெனில் கமல்ஹாசனும் திமுகவை ஆரம்பத்தில் எதிர்த்து இப்போது அவர்களது விசுவாசியாக மாறியிருக்கிறார். விரைவில் திமுக ஆதரவில் ராஜ்யசபா எம்பி ஆக இருக்கிறார். ஆக அரசியல் காரணங்களும் கமல் படங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாகி வருகிறது. இந்த சூழலில் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கும் சிக்கல் வருமோ என தளபதி ரசிகர்கள் தவிப்பில் உள்ளனர்.

விஜய் நடித்த ஜனநாயகன் படம் வருகிற 2026 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது. இதில் விஜய் சில காட்சிகளில் அரசியல் பேசியிருக்கிறார். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலையும் தவெக கட்சி தலைவராக சந்திக்க உள்ளார். அதனால் ஜனநாயகன் படத்தை எதிர்க்க திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வியூகம் அமைக்க அதிக வாய்ப்புள்ளதால் அதுகுறித்த அச்சத்தில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். ஆனால் தளபதியின் அரசியல் கட்சிகளின் பாச்சா பலிக்காது என்றும் ஒரு தரப்பினர் துணிச்சலாக கூறுகின்றனர்.

சற்று முன்