- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்து கிடப்பில் போடப்பட்ட படங்கள், அவர் எடுத்த அதிரடி முடிவு...

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடித்து கிடப்பில் போடப்பட்ட படங்கள், அவர் எடுத்த அதிரடி முடிவு – இத்தனை படங்கள் பெண்டிங் இருக்கா ப்ரோ?

- Advertisement -

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்த பல படங்கள் வெற்றிப்படங்களாக இருந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் நடிகராகவும் அவர் திரையில் தோன்ற ஆரம்பித்தார். பெரிய அளவில் வெற்றிப்படங்களாக இல்லாவிட்டாலும், அவரது படங்களையும் ரசிகர்கள் ரசிக்கவே செய்கின்றனர். அதனால் அவருக்கும் பட வாய்ப்புகள் வந்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இப்போது இந்தியிலும் அவர் காலடி வைக்கிறார். இந்தியில் பிரபல நடிகராகவும், இயக்குநராகவும் உள்ள அனுராக் காஷ்யப் இயக்கும் ஒரு வெப் சீரிஸ்சில் கதாநாயகனாக நடிக்க ஜிவி பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதற்காக அவருக்கு தமிழ் சினிமாவில் இசையமைத்ததற்காக, நடித்ததற்காக இதுவரை பெறாத, பல கோடிகளில் பெரிய சம்பளமாக தரப்பட உள்ளது.

- Advertisement -

செம, ஐங்கரன், ஜெயில், குப்பத்து ராஜா, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர் உள்ளிட்ட பல படங்களில் ஜிவி பிரகாஷ்குமார் நடிப்பு சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக நாச்சியார் படத்தில் குப்பத்து இளைஞராக அழுக்கு பிடித்த கெட்டப்பில் சிறந்த நடிப்பை தந்திருப்பார். அவரது நடிப்பில் செயற்கைத்தனம் இருக்காது என்பதும் கவனிக்கத்தக்கது.

வெயில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஜிவி பிரகாஷ்குமார் அறிமுகமானார். பொல்லாதவன், காளை, குசேலன், ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களுக்கு சிறந்த இசையமைப்பை அவர் தந்துள்ளார். படங்களில் பிஸியாக நடித்தாலும், தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைப்பாளராகவும் பணிசெய்து வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் இதுவரை ஜிவி பிரகாஷ்குமார் நடித்த படங்களில், மொத்தம் 13 படங்கள் இன்னும் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. இந்த படங்களை எல்லாம் விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பணிகளில் இப்போது ஜிவி பிரகாஷ்குமார் தீவிரம் காட்டி அதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டி வருகிறார். இதனால் தயாரிப்பு நிறுவனங்களும் அதற்கான முன் ஏற்பாடுகளை செய்யத் துவங்கிவிட்டன.

இந்த 2024ம் ஆண்டில் மாதம் ஒரு படம் வீதம் டிசம்பர் மாதம் வரை 12 படங்கள், இடையே பண்டிகையின் போது ஏதாவது ஒரு படத்தை இடைசெருகலாக 13 படங்களையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருந்து வருகிறார். இந்த படங்களை ரிலீஸ் செய்யும் வரை புதுப்படங்களில் நடிப்பதை சற்றுக் குறைத்துக்கொள்ளவும் அவர் முடிவு செய்திருக்கிறார். மேலும், படங்களில் இசையமைக்க கூடுதல் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்