- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷின் இட்லி கடை திரைப்படம் இப்படித்தான் இருக்கும்... நான் ஏற்கனவே 40 நிமிடங்கள் படத்தை பார்த்து...

தனுஷின் இட்லி கடை திரைப்படம் இப்படித்தான் இருக்கும்… நான் ஏற்கனவே 40 நிமிடங்கள் படத்தை பார்த்து விட்டேன்… ஆச்சரியப்பட வைத்த ஜிவி பிரகாஷின் பதில்…

- Advertisement -

தனுஷ் தற்போது குபேரா திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். வாத்தி திரைப்படத்திற்கு பிறகு அவர் நேரடியாக தெலுங்கு திரைப்படத்தில் நடிக்கும் இரண்டாவது காவியம் இது. சேகர் கமுலா இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் நாகர்ஜூனா வருகிறார். ராஷ்மிகா மந்தனாவுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 

- Advertisement -

அதேபோல் தனுஷ் படத்தில் பிச்சைக்காரன் கதாபாத்திரத்தில் நடிப்பதும் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தப் படத்தின் டிரைலர் வரும் பத்தாம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தனுஷ் தனது, நான்காவது திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார்.

 

- Advertisement -

இதற்கு இட்லி கடை என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தில் தனுஷிற்கு கௌரவ கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது. நாயகியாக நித்யா மேனன் நடிக்க, கதையின் நாயகனாக அருண் விஜய் வருகிறார். தேனி மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 40 சதவீத சூட்டிங் இதில் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு இசை அமைத்து வருபவர் ஜிவி பிரகாஷ். ஏற்கனவே இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பொல்லாதவன், அசுரன், ஆடுகளம், கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்திருந்தார். இவை அனைத்துமே தனுஷின் திரையுலக பயணத்திற்கும் ஜிவி பிரகாசுக்கும் மிக முக்கியமான திரைப்படங்கள் என்று கூறலாம். இதில் அசுரன் திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷ் பெரிய அளவில் பாராட்டப்பட்டார்.

 

இந்த நிலையில் தான் அவர் தற்போது தனுஷின் இட்லி கடை படத்திற்கும் பணிபுரிந்து வருகிறார். இது குறித்து பேசி இருக்கும் ஜிவி பிரகாஷ், இந்த திரைப்படம் கிராமத்து சார்ந்த கதையாக இருக்கும். இதன் 40 நிமிடங்களை நான் ஏற்கனவே பார்த்துவிட்டேன் மிக நன்றாக இருக்கிறது. நிச்சயம் இந்த திரைப்படம் அனைவருக்குமான படமாக இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

 

இட்லி கடை திரைப்படத்தை தனுஷ் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார். இதே போல் அவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படமும் பலரிடத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அனேகமாக பொங்கல் பண்டிகைக்கு பிறகு இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

 

- Advertisement -

சற்று முன்