- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் சொன்னதும் மழை வந்துச்சா... இந்தப் பாடலை நான் வேறு ஒரு படத்திற்காகத்தான் இசையமைத்தேன்... உள்ளதைச்...

நான் சொன்னதும் மழை வந்துச்சா… இந்தப் பாடலை நான் வேறு ஒரு படத்திற்காகத்தான் இசையமைத்தேன்… உள்ளதைச் சொல்லும் ஜிவி பிரகாஷ்…

- Advertisement -

இசையமைப்பு மட்டுமில்லாமல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார் ஜி வி பிரகாஷ். இதுபோக மதயானை கூட்டம் திரைப்படத்தையும் அவர் தயாரித்திருந்தார். ஏ ஆர் ரகுமானின் சகோதரி மகனான ஜிவி பிரகாஷ் சிறு வயதிலிருந்தே இசையமைப்பில் கவனம் செலுத்தி வந்தார். சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலில் வரும் சிறுவன் குரல் இவரதுதான்.

அங்கிருந்தே இசையின் மீதான தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்ட ஜிவி பிரகாஷ், வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்தப் படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களும் ஹிட் ஆக, பின்னணி இசையிலும் தனி முத்திரை பதித்தார் ஜி வி பிரகாஷ்.

- Advertisement -

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ஜிவி பிரகாஷின் இசையின் தரத்தை உலகறிய செய்தது. தொடர்ந்து செல்வராகவனின், மயக்கம் என்ன திரைப்படத்திற்கும் அவர் இசையமைத்து பலரையும் கவர்ந்தார். இதுபோக, வெற்றிமாறனின் திரைப்படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் குமாரை இசையமைத்து வந்தார். ஆடுகளம் திரைப்படத்தில் அவர் இசையமைப்பை பார்த்து பலரும் வியந்து போயினர்.

இது மட்டுமல்லாமல், 2015 ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ் குமார். திரிஷா இல்லனா நயன்தாரா, எனக்கு இன்னொரு பேரு இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு, நாச்சியார், சர்வம் தாளமயம், சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர், அடியே என அவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்தன. இது போக இசையமைப்பிலும் அவர் விடாமல் கவனம் செலுத்தி வந்தார்.

- Advertisement -

சூரரைப் போற்று திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷ் குமார் அமைத்த இசைக்கு தேசிய விருது கிடைத்தது. ஏற்கனவே அசுரன் படத்தில் அவருக்கு கொடுத்திருக்க வேண்டும் என பலரும் கூறி வந்த நிலையில், சூரரைப் போற்று படத்திற்கு விருது கிடைத்ததால் ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி எடுத்திருக்கும் ஜிவி பிரகாஷ் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது,

வாடிவாசல் திரைப்படத்திற்காக அனைத்து ட்யூன்களும் தயாராக உள்ளது. வெற்றிமாறன் அவரது இருக்கும் பணிகளை முடித்த பிறகு நாங்கள் எங்கள் வேலையை தொடங்குவோம். சுதா கொங்கராவின் புறநானூறு திரைப்படத்திற்கான பாடல்கள் மிக நன்றாக வந்துள்ளன. அந்தப் பாடல்களை நினைத்து நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிந்துபாத் என்னும் திரைப்படத்திற்காக சீயான் விக்ரமும், செல்வராகவனும் இணைவராக இருந்தது. ஆனால் அது கடைசி வரை நடைபெறாமல் போனது. அந்தப் படத்திற்காக நான் இசையமைத்த, நான் சொன்னது மழை வந்துச்சா பாடலை தான் மயக்கம் என்ன திரைப்படத்தில் பயன்படுத்தினோம் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்