- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர் தானா?... ரசிகர்களுக்கு காத்திருக்கும் தடபுடலான விருந்து...

விஜய்யின் கடைசி திரைப்படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனர் தானா?… ரசிகர்களுக்கு காத்திருக்கும் தடபுடலான விருந்து…

- Advertisement -

சமீப காலமாகவே பொதுநலன் சார்ந்த பணிகளில் மிகவும் அக்கறை காட்டி வந்தார் நடிகர் விஜய். பள்ளிக் குழந்தைகளுக்கு உதவி தொகை வழங்கிய அவர், தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையும் அளித்தார். அப்போது விஜய்யை காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அவர் உதவி தொகை அளித்த, காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகின.

இந்த நிலையில், நடிகர் விஜய் வெங்கட் பிரபு உடனான திரைப்படத்துடன் திரைத்துறையை விட்டு விலகுவதாகவும், அவர் விரைவில் அரசியல் கட்சியை தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாக ஆரம்பித்தன. அதேசமயம் நிச்சயம் விஜய் தனது நடிப்பை தொடர்வார் என்று பலரும் கூறி வந்தனர். இப்படியான சூழலில், திடீரென ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் வகையில் தனது அரசியல் கட்சியை ஆரம்பித்தார் விஜய்.

கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்றும் பெயர் வைக்கப்பட்டது. இதற்காக, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்ற புஸ்ஸி ஆனந்த், கட்சியின் பெயரை பதிவு செய்வதற்காக விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து, தனது முதல் அறிக்கையையும் விஜய் வெளியிட்டார். பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் வள்ளுவனின் வாக்கை முதன்மையாகக் கொண்டு அவரது கடிதம் வெளியானது.

அதில் ஊழல் நிறைந்த அரசியல் கலாச்சாரம் ஒரு பக்கம், பிளவுவாத அரசியல் இன்னொரு பக்கம் என இரு பக்கமும் முட்டுக்கட்டையாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அரசியல் தனக்கு பொழுதுபோக்கு அல்ல புனிதமான பணி என்றும், அதன் உயரம் மட்டுமல்ல நீளம் அகலத்தையும் எம் முன்னோர்கள் வழி நின்று தான் மனதளவில் பக்குவப்பட்டு வருவதாகவும் விஜய் கூறியிருந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை தெளிவாக குறிப்பிட்டு இருந்த விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவதால் தனது இலக்கு என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், இன்னொரு திரைப்படம் ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், அந்த திரைப்படத்தை முடித்த பிறகு முழுமையாக அரசியல் வாழ்க்கையில் ஈடுபட போவதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இப்படியான சூழல் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குபவர் யார் என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ளது. அதுவும் தனது கடைசி படம் என்று விஜய் கூறி இருப்பதால், நிச்சயம் அது அரசியல் சார்ந்த திரைப்படமாக தான் இருக்கும் என்று பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான சூழலில், அது திரைப்படத்தை தெலுங்கு நிறுவனம் தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் திரைப்படத்தை எச் வினோத் இயக்கலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அரசியல் கதை ஒன்றை வினோத் விஜய்யிடம் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே வினோத், ராஜ் கமல் நிறுவனத்துடன் கதை ஒப்பந்தம் செய்த நிலையில், அந்தக் கதையை தான் தற்போது விஜய்யிடம் கூறி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான தடையில்லா சான்றிதழை கமல் நிறுவனம் அளித்தால், வினோத் உடன் விஜய் இணைவார் என சினிமா விமர்சகர்கள் பேசி வருகின்றனர்.

சற்று முன்