- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சுதாகருக்கு நான் எழுதிய வசனம் இப்போ விஜய்சேதுபதிக்கு சரியாக பொருந்தும் - ஓபனாக பேசிய...

நடிகர் சுதாகருக்கு நான் எழுதிய வசனம் இப்போ விஜய்சேதுபதிக்கு சரியாக பொருந்தும் – ஓபனாக பேசிய இயக்குனர் கே பாக்யராஜ்!

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி ஆரம்பத்தில் சில படங்களில் துணை நடிகராக நடித்தவர். பிறகு ஹீரோவாக மாறி பல படங்களில் நடித்து நட்சத்திர நடிகராக மாறினார். பிறகு ரஜினி கமல் விஜய் போன்றவர்களுக்கு வில்லனாகவும் நடித்தார். இப்போது பல படங்களில் ஹீரோவாக நடிப்பை தொடர்கிறார். அவரை பற்றி இயக்குனர் கே பாக்யராஜ் ஒரு நேர்காணலில் விமர்சித்து பேசியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு நேர்காணலில் பங்கேற்ற இயக்குனர் மற்றும் நடிகர் கே பாக்யராஜ் கூறியதாவது, விஜய் சேதுபதியை பார்த்தாலே எனக்கு நடிகர் சுதாகருக்கு எழுதிய ஒரு டயலாக் தான் ஞாபகத்துக்கு வரும். கிழக்கே போகும் ரயில் படத்தில் முதல் முறையாக சுதாகர் நடிக்கிறார். பழனியில் நாளைக்கு காலையில் ஷூட்டிங்.

- Advertisement -

அந்த படத்தில் அவர் பாட்டு கட்டுகிற ஆள். அதாவது கவிதை பாடுகிற ஆள். அப்போ நாளைக்கு அவர் பேச மாதிரி என்ன டயலாக் எழுதலாம் என்று நான் உட்கார்ந்து யோசித்துக்கொண்டு இருந்தேன். முதன் முறையாக அவன் ஹீரோவாக நடிக்கிறான். அவன் வாயில் இருந்து முதல்ல வர்ற வார்த்தைகள் நல்ல விதமான வார்த்தைகளாக இருக்கணும்.

அவன் சொல்ற வார்த்தைகளும் நல்லதா இருக்கணும். பாட்டு கட்டுற ஆள் என்பதால் அதுக்கு தகுந்த மாதிரியும் இருக்கணும் என்று யோசித்தேன். அப்போ தான் அவன் முடியை வெட்டி விட்டுட்டே, எல்லாருக்கும் நேரம் வரணும் தெரிஞ்சுக்கோ, அது நல்லவருக்கே நிலைச்சிருக்கும் புரிஞ்சுக்கோ என்று பேசுவது போல அந்த வசனத்தை எழுதியிருந்தேன்.

- Advertisement -

இதை ஏன் சொல்ல வர்றேன்னா, விஜய் சேதுபதிக்கு லேட்டா தான் நல்ல நேரம் வந்துச்சு. எடுத்தவுடனே வரலே,அவர் அவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு அப்புறம்தான் முன்னுக்கு வந்தார். அந்த பாட்டுல நான் சொன்ன மாதிரி அந்த நல்ல நேரத்தை அவர் காப்பாத்திட்டு இருக்கிறார்.

நான் ஹீரோவாக தான் நடிப்பேன் என்று இல்லாமல் வில்லனா சரி ஓகே என்று எந்த விதமான கேரக்டர் என்றாலும் நடிக்கிறார். நம்மளே லேட்டா வந்தோம். வில்லனா சரி ஓகே என்று நடிக்கிறார். ஒவ்வொண்ணையும் ஸ்போர்ட்டிவ்வா எடுத்துக்கிட்டு அவர் பண்ணிட்டு இருக்கிறார். அந்த விஷயத்தில் அவர் கெட்டிக்காரர் என்று இயக்குனர் கே பாக்யராஜ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்