- Advertisement -
Homeபொழுதுபோக்குலப்பர் பந்து படம் வெற்றிக்கு பிறகு ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம், கவின் பட...

லப்பர் பந்து படம் வெற்றிக்கு பிறகு ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய படம், கவின் பட இயக்குனருடன் கை கோர்க்கிறார் – கதாநாயகியும் கவின் பட நடிகைதானா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக ரசிகர்களின் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறார் ஹரீஷ் கல்யாண். விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், அவருக்கு மத்தியில் நல்ல பரிச்சயம் கிடைத்தது. பொறியாளன், பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ஆனால் ஹரீஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் படம் மிகப்பெரிய ஒரு வரவேற்பை அவருக்கு பெற்றுத் தந்தது. ஒரு வாடகை போர்ஷனில் 2 வீடுகளில் குடியிருக்கும் இரண்டு பேருக்கு, காம்பவுண்டுக்குள் காரை பார்க்கிங் செய்வது யார் என்ற மோதலை மையப்படுத்தி இந்த படம் பெரிய வரவேற்பை பெற்றது.

- Advertisement -

குறிப்பாக இந்த படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பும், குணச்சித்திர நடிகர் எம்எஸ் பாஸ்கரின் நடிப்பும் பெரிய அளவில் படத்தின் வெற்றிக்கு வழிவகுத்தது. அதிலும் முதன்முறையாக வில்லத்தனமாக கேரக்டரில் எம்எஸ் பாஸ்கர் நடிப்பு, ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்தது. வேற லெவலில் நடித்து பார்க்கிங் படத்தை சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு படமாக மாற்றியிருந்தார்.

பார்க்கிங் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்த படம் லப்பர் பந்து. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படத்தில் மற்றொரு முக்கிய கேரக்டரில் கெத்து தினேஷ் நடித்திருந்தார். கிரிக்கெட் போட்டியை மையப்படுத்திய இந்த படமும் அபார வெற்றி பெற்று, ஹரீஷ் கல்யாணுக்கு தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுத் தந்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் அடுத்து ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். கவின் நடித்த லிப்ட் என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வினீத் வர பிரசாத் இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் நாயகியாக, கவின் நடித்த ஸ்டார் படத்தில் நடித்திருந்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் டிசம்பர் மாதத்தில் படப்பிடிப்பை துவங்க ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கவின் நடித்த லிப்ட் படத்தை இயக்குனர் வினீத் வர பிரசாத், கவின் நடித்த ஸ்டார் படத்தில் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன், ஹரீஷ் கல்யாணுடன் இந்த படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கின்றனர். ஸ்டார் படத்தில் முதலில் ஹரீஷ் கல்யாண் நடிப்பதாக இருந்து பிறகு கவின் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பார்க்கிங், லப்பர் பந்து பட வரிசையில் இந்த படமும் ஹரீஷ் கல்யாணுக்கு மிகப்பெரிய வெற்றியை தருமா, என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்