- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் நடிக்கற வெங்கட் பிரபு படத்துல இவர்தான் வில்லன் - நடிப்புல இவர், ஹீரோவை...

விஜய் நடிக்கற வெங்கட் பிரபு படத்துல இவர்தான் வில்லன் – நடிப்புல இவர், ஹீரோவை தூக்கி சாப்பிட்டு விடுவாரே? – ரசிகர்கள் கமெண்ட்

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடித்த ‘லியோ’ படத்தின் ஆடியோ லாஞ்ச், வரும் 30ம் தேதி, பிரமாண்டமாக நடக்க ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. தியேட்டர்களில் வரும் 30ம் தேதி, ‘லியோ’ ரிலீஸ் ஆகிறது. ‘லியோ’ படத்தை வரவேற்றுக் கொண்டாட, விஜய் ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்த படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர். பீஸ்ட், வாரிசு படங்கள், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறாத நிலையில், இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்பதில், விஜய் ரசிகர்கள் உறுதியாக இருக்கின்றனர். அதற்கு ஏற்றது போல, லோகேஷ் கனகராஜ் சிறந்த படமாக தருவார் என்றும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

‘லியோ’ படத்தை தொடர்ந்து, இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 58 படம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்பா -மகன் என இரட்டை வேடத்தில் விஜய் நடிக்கும் நிலையில் சிநேகா, பிரியங்கா மோகன் ஆகியோர் ஜோடியாக நடிக்க உள்ளதாக தெரிகிறது. மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தேர்வும் துரிதமாக நடந்து வருகிறது.

பெரிய ஹீரோக்களின் படத்தை பொருத்தவரை, ஆக்‌ஷன் படங்கள் என்றால் நிச்சயம், வில்லன் கேரக்டர் பேசப்படும் அளவுக்கு இருக்க வேண்டும். சமீபத்தில் வந்த ‘ஜெயிலர்’ படத்தில், வில்லனாக நடித்த விநாயகன் பலத்த பாராட்டை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 58 படத்துக்கு வில்லன் யார் என்ற தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

வெங்கட்பிரபு, விஜய்க்கு எதிராக வில்லனாக நடிக்க நடிகர் அரவிந்த் சாமியை தேர்வு செய்திருக்கிறார்.இதையடுத்து, வெங்கட்பிரபு படத்தில் விஜய் உடன் மோதுபவர் அரவிந்த் சாமி என்பது உறுதியாகி இருக்கிறது. ஏற்கனவே ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, ‘போகன்’ படங்களில், ஆண்டி-ஹீரோ கேரக்டரில் அரவி்ந்தசாமி, நடிப்பில் மிரட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விஜய்க்கு வில்லனாக நடிக்கும் அரவிந்த் சாமி, நடிப்பில் வெளுத்து வாங்குவார் என்பதில் சந்தேகமில்லை.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், 1990களில் இளம்பெண்களின் பலரது கனவு ;நாயகனாக வலம் வந்தவர் அரவிந்த் சாமி. பெண்ணுக்கு வரன் பார்த்த பலரும், ‘ ‘அரவிந்த் சாமி மாதிரி அழகான மாப்பிள்ளையாக இருக்க வேண்டும்’ என்று எதிர்பார்த்த காலம் உண்டு. அப்படிபட்ட அழகான ஹீரோவாக ரசிகர்களின் மனதை வென்ற அரவிந்த், இப்போது சிறந்த வில்லனாகவும் தனது நடிப்பில் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்