- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த ஒரு பொருளை வெச்சுதான் டைரக்டரை திருப்திபடுத்தினேன், இல்லேன்னா, நானும் ரிஜக்ட் ஆயிருப்பேன் - ...

அந்த ஒரு பொருளை வெச்சுதான் டைரக்டரை திருப்திபடுத்தினேன், இல்லேன்னா, நானும் ரிஜக்ட் ஆயிருப்பேன் – அப்படி என்னங்க பொருள் அது

- Advertisement -

தமிழ் சினிமாவில், ரசிகர்களை திருப்திப்படுத்துவதை விட, ஷூட்டிங் ஸ்பாட்டில் டைரக்டரை திருப்திபடுத்துவது ரொம்ப ரொம்ப முக்கியம். நினைத்தபடி, நினைத்த காட்சி வராவிட்டால், அவர்களால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை தாவணிக்கனவுகள் படத்தில், பாரதிராஜாவை வைத்து, ஒரு காட்சியில் சிறப்பாக காட்டியிருப்பார் பாக்யராஜ்.

அதுபோல், நல்ல இயக்குநர்கள் தங்களது படத்தில் ஒவ்வொரு காட்சியும் சிறப்பாக அமைய நிறைய மெனக்கெடுவார்கள். குறிப்பாக ஷங்கர், பாரதிராஜா, பாக்யராஜ், லிங்குசாமி, கேஎஸ் ரவிக்குமார், சேரன், நெல்சன் என பல இயக்குநர்களுக்கும் அது பொருந்தும். ஏனெனில், காட்சி சிறப்பாக ரசிக்கப்பட வேண்டுமெனில், அதில் நடிப்பவர்களின் பாத்திரம், அப்படியே நுாலிழை பிசகாமல் திரையில் பிரதிபலிக்க வேண்டும்.

அந்த வகையில், சண்டக்கோழி படத்தில் விஷாலை பழிவாங்க செல்லும் வில்லன் குரூப்புக்கு உதவ முன்வரும் மாற்றுத்திறனாளி கேரக்டரில் நடித்திருப்பார் தலைவாசல் விஜய். அப்பு, பார்த்தேன் அப்பு, விடிகாலையில, வாழைத்தோப்புல, மணிக்கணக்கா வேவு பார்த்து, நீங்க அருவா வீசுனதை பார்த்தேன் அப்பு, என லாட்ஜூக்குள் வந்து வசனம் பேசி, வில்லனையே திகைக்க வைப்பார்.

இந்த காட்சியில் ஏற்கனவே ஒருவரை நடிக்க வைத்து, அவரது நடிப்பு இயக்குநர் லிங்குசாமிக்கு திருப்தி இல்லாமல் போய்விட்டது. அதற்கு பின், அந்த கேரக்டரில் நடிக்க தலைவாசல் விஜய்க்கு அழைப்பு வந்திருக்கிறது. கேரக்டரை உள்வாங்கி அழகாக அந்த உணர்வுகளை பிரதிபலித்து நடிப்பவர்களில் தலைவாசல் விஜய் ஒருவர் என்பதால், அவருக்கு அந்த கேரக்டரை தந்திருக்கிறார் லிங்குசாமி.

ஷூட்டிங் ஸ்பாட்டில் தலைவாசல் விஜய், அந்த கேரக்டருக்கான லுங்கி, பனியன், சட்டை, கழுத்தில் துண்டு, நெற்றியில் பொட்டு என, அந்த கெட்டப்பில் வாழை தோட்டத்துக்குள் காலை விந்தி விந்தி நடந்து வந்து நடித்து காட்டியிருக்கிறார். ஆனால் லிங்குசாமிக்கும் அங்கிருந்த உதவி இயக்குநர்களுக்கும் ஏதோ குறையாக, மிஸ் ஆவது போல தோன்ற, இல்லே சார், இன்னும் கொஞ்சம் பெட்டரா வேண்டும் என்று கூறி இருக்கின்றனர்.

அப்படியா என்றபடி மீண்டும் சிறிது தூரம் சென்ற தலைவாசல் விஜய், மீண்டும் அதே போல் நடந்து வந்த போது, படக்குழுவே அசந்து போய், சூப்பர் சூப்பர் என பாராட்டி இருக்கின்றனர். அதற்கு காரணம் இதுதான். இதற்கு முன் தேவன் என்ற படத்தில் தலைவாசல் விஜய் நடித்த போது, அந்த கேரக்டருக்காக தரப்பட்ட பெரிய பல்லை, தன்வசமே அவர் வைத்திருக்கிறார். அந்த பல்லை, வாயில் மேலுதட்டுக்கு கீழ் வைத்து. உதடு தூக்கியபடி அவர் விந்தி விந்தி நடந்து வர, அந்த கேரக்டரே உயிர் பெற்று வந்தது போன்று படக்குழுவினரை அசத்தி இருக்கிறார். இதை சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தலைவாசல் விஜய் பெருமிதமாக கூறியிருக்கிறார்.

சற்று முன்