- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்ன அஜித் ஆளே மாறிட்டாரு.. விடாமுயற்சியில் தரமான சம்பவம் காத்திருக்கோ.. ரசிகர்கள் கொண்டாட்டம்

என்ன அஜித் ஆளே மாறிட்டாரு.. விடாமுயற்சியில் தரமான சம்பவம் காத்திருக்கோ.. ரசிகர்கள் கொண்டாட்டம்

- Advertisement -

துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அஜித் தனது 62ஆவது படத்தில் கமிட்டானார். எப்போதும் ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட்டாகும் அஜித் வழக்கத்துக்கு மாறாக ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே அடுத்த படத்தில் கமிட்டானது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.

அதன்படி அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. பெயர் மீது அஜித் ரசிகர்களுக்கு பெரும்பாலும் உடன்பாடு இல்லையென்றாலும் மகிழ் திருமேனி இயக்கம் என்பதால் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கின்றனர். ஆனால் மே மாதத்துக்கு கிட்டத்தட்ட ஐந்து மாதங்களாக படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் படத்தில் சஞ்சய் தத் வில்லன் என்றும் த்ரிஷா, ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும் அஜர்பைஜான் நாட்டில் படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கிவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் லைகா தரப்பு இன்னும் வெளியிடவில்லை.

இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் நடப்பது கிட்டத்தட்ட உறுதிதான். அதேசமயம் படக்குழுவுக்கு அதிர்ச்சி தரும் விதமாக கலை இயக்குநர் மிலன் சமீபத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அது ஷூட்டிங்கை கொஞ்சம் பாதித்திருக்கிறது. இருந்தாலும் படத்தை விரைவில் முடிக்க மகிழ் திருமேனி முழு மூச்சுடன் களமிறங்கியிருக்கிறாராம்.

- Advertisement -

இந்நிலையில் படத்தில் அஜித்தின் கெட்டப் என்னவாக இருக்கும் என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்திருந்தது. மங்காத்தா படத்திலிருந்தே அஜித் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வலம் வருகிறார். துணிவு படத்தில் முழுவதும் நரைத்த தாடி மற்றும் முடியுடன் தோன்றினார். தற்போது அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

அதில் துணிவு படம் போலவே முழுக்க முழுக்க நரைத்டஹ் முடி மற்றும் தாடியுடன் இருக்கிறார். மேலும் உடல் எடையை கொஞ்சம் குறைத்து தாடியை ட்ரிம் செய்தும் காணப்படுகிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இதுதான் விடாமுயற்சி கெட்டப்பா இருக்குமோ என கேள்வி கேட்டு ஒருவேளை இதுவாக இருந்தால் கண்டிப்பாக படத்தில் அஜித் வேற லெவலில் இருப்பார் என்றும் சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்