ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானது. உலகம் முழுவதும் 700 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அவர் தற்போது ஜெய் பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் தன்னுடைஅய் 170ஆவது படத்தில் நடித்துவருகிறார். அதற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் நடிக்கவிருக்கிறார்.
இதற்கிடையே ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் கமிட்டானார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் லீட் ரோலில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
படத்தில் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்கிறார்.மொய்தீன் பாய் என்ற கேரக்டரை ஏற்றிருக்கும் அவர் மும்பையில் தாதாவாக இருப்பார் ஒரு பெரிய பிரச்னையில் இருந்து விஷ்ணு விஷாலையும், விக்ராந்த்தையும் காப்பாற்றுவது போன்று அவரது காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. படத்தில் மொத்தம் ஒருமணி நேரம்வரை அவர் திரையில் வருவார் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவிக்கிறது.
திருவண்ணாமலை, புதுச்சேரி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்தது.இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங்கை முடித்த கையோடு ஐஸ்வர்யா போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் மும்முரமாக இறங்கினார்.
இதுவரை அவர் இயக்கிய 3, வை ராஜா வை ஆகிய இரண்டு படங்களுமே சரியாக போகாததால் இந்தப் படத்தை ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் வேலை செய்துவருகிறார். ரஜினிகாந்த்தும் தனக்கான டப்பிங்கை சில மாதங்களுக்கு முன்பு கொடுத்துவிட்டார். அதுதொடர்பான வீடியோவும் வெளியாகி ட்ரெண்டானது. படமானது அடுத்த வருட பொங்கலுக்கு ரிலீஸாகவுள்ளது.
Adding a spark ✨ to your Diwali celebration 🪔 with an exciting announcement!💥
Get ready for a 1min 34secs preface of #LalSalaam 🫡 releasing this Sunday, Nov 12 at 10:45AM ⏳
In Cinemas 📽️ PONGAL 2024 Worldwide ☀️🌾 Releasing in Tamil, Telugu, Hindi, Malayalam & Kannada!… pic.twitter.com/0Y0dfi0bHG
— Lyca Productions (@LycaProductions) November 10, 2023
இந்நிலையில் லால் சலாம் படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி தீபாவளி தினமான நவம்பர் 12ஆம் தேதி காலை 10.45 மணிக்கு லால் சலாம் படத்தின் டீசர் வெளியிடப்படும் என்று படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.





