- Advertisement -
Homeபொழுதுபோக்குலியோ வெற்றி விழாவுக்கு போறீங்களா?.. இதையும் கொண்டு போகனுமாம்.. செக் வைத்த படக்குழு

லியோ வெற்றி விழாவுக்கு போறீங்களா?.. இதையும் கொண்டு போகனுமாம்.. செக் வைத்த படக்குழு

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான படம் லியோ. த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த் என பெரும் நட்சத்திர பட்டாளமே படத்தில் நடித்திருந்தது. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் ஹிட்டடித்து செம ரெஸ்பான்ஸை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலி ருந்தார்கள் ரசிகர்கள்.

ஆனால் லியோ படமோ விஜய் ரசிகர்களை தவிர்த்து மற்றவர்களை திருப்திப்படுத்த தவறியது. மேலும் லோகேஷ் கனகராஜின் இயக்கமே சரியில்லை. அவருக்கு இந்தப் படம் முதல் சறுக்கல் என்றும் ஓபன் ஸ்டேட்மெண்ட்டாக பலரும் பேசினார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்தான். இருந்தாலும் லியோ மீது வேண்டுமென்றே சிலர் அவதூறு பரப்புகிறார்கள் என்றும் தளபதி ஃபேன்ஸ் கூறுகிறார்கள்.

விமர்சன ரீதியாக லியோ கொஞ்சம் அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக சக்கைப்போடு போடுகிறது. முதல் நாளில் 148 கோடி ரூபாய், முதல் வார முடிவில் 461 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. மேலும் இதுவரை மொத்தம் 500 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது என்றும் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த சூழலில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா நாளை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருப்பதாகவும் அதற்கான அனுமதியை காவல் துறை கொடுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. ஆடியோ லான்ச்சுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில் வெற்றி விழா நடக்கவிருப்பதால் விஜய்யை நேரில் காண்பதற்கு ரசிகர்கள் ஆவலோடு இருக்கிறார்கள்.

அதேசமயம் ஆடியோ லான்ச்சுக்கு டிக்கெட்டுகள் போலியாக விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததன் காரணமாக இந்த முறை டிக்கெட்டுக்களை ஆன்லைனில் விற்கவும் படக்குழு முடிவு செய்திருக்கிறதாம். அதேபோல் குறிப்பிட்ட பேரைத்தான் உள்ளே அனுமதிப்பது என்ற முடிவிலும் படக்குழு கறாராக இருப்பதாகவும் தெரிகிறது. மேலும் இந்த முறை எந்த சொதப்பலும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறது படக்குழு.

இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழாவுக்கு செல்பவர்கள் வெறும் பாஸை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றால் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர்கள் தங்களது ஆதார் அட்டையையும் கையோடு எடுத்து சென்றால்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இது அத்தனையும் வெற்றி விழா நிகழ்ச்சி மீது சிறு விமர்சனம்கூட எழுந்திடக்கூடாது என்பதால்தானாம்.

சற்று முன்