- Advertisement -
Homeபொழுதுபோக்குஎல்லாம் ஆஸ்கர் வரைதான்.. நாங்களே ஒரு லட்சம் செலவு செய்தோம்... Elephant Whisperers தம்பதியின் கண்ணீர்...

எல்லாம் ஆஸ்கர் வரைதான்.. நாங்களே ஒரு லட்சம் செலவு செய்தோம்… Elephant Whisperers தம்பதியின் கண்ணீர் கதை

- Advertisement -

நெட்ஃபிளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியான ஆவண படம் The Elephant Whisperers. தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் மற்றும் பெல்லி ஆகிய இரண்டு ரகு, அம்மு என்ற யானைக்குட்டிகளை வளர்ந்தனர். அந்த இரண்டு யானைக்குட்டிகளும் பொம்மனும், பெல்லியும் என்ன சொன்னாலும் கேட்டன. இந்த உணர்வுப்பூர்வமான விஷயத்தை கார்த்திகி ஆவணப் படமாக இயக்கினார்.

அனைவரிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற அந்த ஆவணப் படம் சிறந்த ஆவண படமாக ஆஸ்கர் விருதை வென்றது. இதனையடுத்து பொம்மனும், பெல்லியும் உலகம் முழுவதும் பிரபலமடைந்தனர். அவர்களை பலரும் பாராட்டு தெரிவித்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டினர். அதேபோல் மும்பையில் ஒரு விழாவில் கலந்துகொண்டு விமானத்தில் வந்த அவர்களுக்கு சக பயணிகள் எழுந்து நின்று கைத்தட்டி மரியாதை கொடுத்தனர்.

இந்தச் சூழலில் அவர்கள் இருவரும் கொடுத்திருக்கும் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஆஸ்கர் விருது வென்ற பிறகு யாரும் எங்களை கண்டுகொள்ளவே இல்லை என கூறியிருக்கின்றனர். அவர்கள் அளித்த முழு பேட்டி இதோ, “உங்கள் வாழ்க்கையை ஆவணப் படமாக எடுக்க வேண்டும் என கார்த்திகி எங்களிடம் கேட்டுக்கொண்டார். அதற்காக நாங்கள் ஒத்துழைப்பையும் கொடுத்தோம்.

எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும்; பசியெல்லாம் மறந்து இதற்காக கடுமையாகவே நாங்கள் உழைக்கவே செய்தோம். அதுமட்டுமில்லாமல் நாங்களே கிட்டத்தட்ட ஒரு லட்சம் ரூபாய்வரை இதற்காக செலவு பண்ணோம். இந்தப் படம் வெளியாகட்டும். அதற்கு பிறகு கண்டிப்பாக உங்களுக்கு உதவுவேன் என கார்த்திகி கூறியிருந்தார். இந்த சுழுஅலில் படத்துக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. அதனையடுத்து டிக்கெட் போட்டு எங்களை வரவழைத்தனர். விருதை வாங்கி முடித்தவுடன் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. திரும்பி இங்கு வருவதற்கே கஷ்டப்பட்டோம்.

அவர்கள் எங்களுக்கு பல லட்சம் ரூபாய் கொடுப்பதாக கூறப்படுகிறது. அதெல்லாம் சுத்த பொய். இதுவரை ஒரு ரூபாய்கூட அவர்கள் எங்களுக்கு தரவில்லை. பணம் கேட்டால் நாங்கள் உங்களுடைய வங்கி கணக்குக்கு அனுப்பிவிட்டோம்.நீங்கள் செலவு செய்திருப்பீர்கள் என்கின்றனர். கார்த்திகி ஃபோனே எடுப்பதில்லை. அதனால் நாங்கள் வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடுத்தோம். அதற்காகவும் எங்களை மிரட்டுகிறார்கள்.

இப்போது பத்து ரூபாய்கூட இல்லை. முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் எங்களுக்கு பணம் கொடுத்தார்” என்றனர். அவர்களின் இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதுமட்டுமின்றி கார்த்திகிக்கு பலரும் கண்டனத்தை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.

சற்று முன்