பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களும் விஜய்யின் கரியரில் மோசமான படங்களாக அமைந்துவிட்டன. அதிலும் வாரிசு படத்தில் விஜய்யின் நடிப்பும், மேனரிசமும், படத்தின் கதையும் ரொம்பவே ட்ரோல் செய்யப்பட்டது. விஜய்யின் படங்கள் வாரிசுக்கு முன் ட்ரோல் சோனுக்குள் பெரிதாக வந்ததில்லை. அந்த அளவு வம்சி பைடிபள்ளி வைத்து செய்திவிட்டார் வாரிசு படத்தை.
எனவே அடுத்த படத்தை தரமாக கொடுக்க காத்திருக்கிறார் விஜய். அதன்படி லோகேஷுடன் இணைந்திருக்கும் அவர் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் லியோ இந்த மாதம் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. படத்தின் ட்ரெய்லர் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
சூழல் இப்படி இருக்க லியோ படத்துக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் படம் உருவாகிறது. வெங்கட் பிரபுவின் படங்கள் ஜாலியாக இருக்கும் என்பதால் கண்டிப்பாக இந்தப் படமும் ஜாலி ஜானரில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் தவிர்த்து வேறு யாரும் கலந்துகொள்ளவில்லை. ஏன் வெங்கட் பிரபுவின் நண்பர்கள்கூட கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று பூஜையை முடித்த கையோடு பிரசாத் ஸ்டூடியோவில் இன்று படத்தின் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இந்தப் பாடலுக்கு பிரபுதேவா கோரியோகிராஃபி செய்கிறார். அவர் இந்தப் படத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
பிரபுதேவாவை தவிர்த்து இப்படத்தில் விஜய்யுடன் அஜ்மல், வைபவ், அஜய், பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்டோர் நடிக்கவிருக்கின்றனராம். ஆக இது ஒரு மல்டி ஸ்டாரர் படமாக உருவாகிறது என்கின்றனர் திரைத்துறையினர். லியோவும் ஒரு மல்டிஸ்டாரர் படம்தான் என்பது நினைவ்கூரத்தக்கது. இப்படி தளபதி 68 டேக் ஆஃப் ஆகியிருக்கும் சூழலில் படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது.
அதாவது, இந்தப் படத்தில் விஜய்க்கு இரண்டு வேடங்கள் என்று ஏற்கனவே பேசப்பட்டுவருகிறது. அதில் வயதான விஜய்க்கு சினேகா ஜோடி என்றும் இளைய வயது விஜய்க்கு ப்ரியங்கா மோகன் ஜோடி என்றும் சொல்லப்பட்டது. ஆனால் ப்ரியங்கா மோகனுக்கு பதிலாகத்தான் மீனாட்சி சௌதர் கமிட் ஆகியிருக்கிறாராம். ஆக படத்தில் மொத்தம் இரண்டு கதை நாயகிகள். இந்த சூழலில் மூன்றாவதாக ஒரு கதாநாயகியை நடிக்க வைக்கவும் ஒரு நடிகையிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறதாம். அநேகமாக அந்த ரோல் ப்ரியங்கா மோகனுக்கு செல்லலாம் எனவும் கூறுகிறார்கள் விவரமறிந்தவர்கள்.





